Published : 13 Oct 2019 11:49 AM
Last Updated : 13 Oct 2019 11:49 AM

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: எதிர் தரப்பு அதிருப்தியாளர்களை வளைக்கும் அதிமுக, திமுகவினர்

எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள் ளது. தேர்தல் களத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தி, இயக் குநர் வ.கௌதமன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி உள் ளிட்ட 12 பேர் உள்ளனர். 2,23,387 வாக் காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இவர்களின் அதிமுக, திமுக இடையே பலத்த போட்டி நிலவுகி றது. திமுகவில் தேர்தல் பணிக்குழு தலைவராக எம்பி ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்களுக்கு அவரகள் சாதி சார்ந்த வாக்காளர்கள் அதிகம் உள்ள பகுதிகள் ஒதுக்கப்பட்டு, 50 வாக்காளர்களுக்கு ஒரு குழுவீதம் அமைக்கப்பட்டு, அவர்களிடம் அக்குழு பிரச்சாரம் செய்து வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள முக்கிய பிரமுகர்களை திமுக பிரச்சாரக் குழுவின் முக்கிய நிர்வாகி வர வழைத்து பேசி, அவர்கள் மூலம் வாக்குகளை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் அடுத்து திமுக ஆட்சி வந்தால், உங்கள் சிபாரிசுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் களுக்கு வாக்குறுதிகள் அளிக் கப்படுகின்றன.

அதிமுகவில் அமைச்சர் சிவி சண் முகம் ஒருங்கிணைப்பில் அமைச்சர் கள் கே. ஏ. செங்கோட்டையன், பாண் டியராஜன் உள்ளிட்டோருக்கு பகுதி கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதிமுக நிர்வாகிகள் தங்கள் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் காலை 9.30க்கு ஓரிடத்தில் கூடி அன்றைய பணிகளை தொடங் குகின்றனர். அதிருப்தியில் உள்ள திமுக மற்றும் விசிக நிர்வாகிகளை அமைச்சர்களே நேரடியாக தொலை பேசி மூலம் பேசியும், நேரில் சந்தித்தும் பேசி வருகின்றனர்.

மேலும், அமமுக நிர்வாகிகளை சந்தித்து, நமக்குள் பிரச்சினைகள் இருந்தாலும், நம் பொது எதிரி திமுகவை வீழ்த்த இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கூறி வருகின்றனர். பெண் வாக்காளர், இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்ய இளம் பெண்கள், இளையோர் பாசறை என பிரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

திமுக கூட்டணியில் உள்ள வைகோ, முத்தரசன், ஜி, ராம கிருஷ்ணன், திருமாவளவன் ஆகி யோர் முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்த நிலையில் நேற்று திமுக தலைவர் ஸ்டாலின், பிரச்சாரம் செய்தார். 14ம் தேதி உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள் கிறார்.

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக மாநில மகளிரணி செய லாளர் பிரேமலதா 15ம் தேதி பிரச்சாரம் செய்கிறார். முதல்வரின் பிரச்சாரம் முடிந்த பின் டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் செய்த நிலையில், துணை முதல்வர் பன்னீர் செல்வம் இன்று பிரச்சாரம் செய்கிறார்.

மேலும் சில அமைச்சர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட உள்ளனர். அதே போல திமுகவின் அனைத்து மாவட்ட செய லாளர்களையும் விக்கிரவாண்டி தொகுதிக்கு வர வேண்டும் என திமுக தலைமை உத்தரவிட் டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் இரு கட்சிகளும் பிரச் சாரத்தில் சரி பலத்தில் உள்ளன. இரு கட்சிகளும் வெற்றி பெற தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்த இடைத் தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்க தீவிர கண்காணிப்பு நடந்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x