Published : 13 Oct 2019 09:43 AM
Last Updated : 13 Oct 2019 09:43 AM

சீன அதிபருக்கு வழங்கிய நாச்சியார்கோவில் குத்துவிளக்கும், தஞ்சை ஓவியமும்: பூம்புகார் நிறுவன கைவினை கலைஞர்கள் பெருமிதம்

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்

தமிழர்களின் தனித்துவமிக்க கைவினைப் பொருட்களான நாச்சி யார்கோவில் குத்துவிளக்கும், தஞ் சாவூர் ஓவியமும் இந்திய பிரதமர் மோடியால் சீன அதிபர் ஜி ஜின் பிங்குக்கு வழங்கப்பட்டுள்ளது தங் களுக்கு பெருமிதத்தை ஏற்படுத்தி உள்ளதாக பூம்புகார் நிறுவன கைவினைக் கலைஞர்கள் தெரிவித் தனர். இதேபோன்று, கோவை மாவட்டம் சிறுமுகை நெசவாளர் கள் தயாரித்த சீன அதிபரின் உரு வத்துடன் கூடிய பட்டாடை, தமிழக அரசு சார்பில் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவிலில் உற்பத்தி செய்யப்படும் குத்துவிளக்குகள் ஐந்து முக அமைப்பு கொண்டவை. நகாசு வேலைப்பாடுகள் கொண்டதால் நாச்சியார்கோவில் குத்துவிளக் குக்கு வீடுகள், பெரிய நிறுவனங்க ளில் தனி இடம் உண்டு. புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ள இந்த குத்து விளக்குகள் நாச்சியார்கோவிலில் அரை அடி முதல் 8 அடி உயரம் வரை வடிவமைக்கப்படுகின்றன.

இந்நிலையில், மாமல்லபுரத் துக்கு வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் குக்கு தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு நிறுவன மான பூம்புகார் சார்பில் தயாரிக்கப் பட்ட நாச்சியார்கோவில் அன்னம் விளக்கு, தஞ்சாவூர் நடனமாடும் சரஸ்வதி ஓவியம் ஆகியவற்றை பிரதமர் மோடி நினைவுப் பரிசாக வழங்கினார்.

நாச்சியார்கோவில் அஷ்டோத் தர அன்னம் விளக்கு 3 அடி உயரம், 15 கிலோ எடை கொண்டது. 108 சகலி மூக்கு அமைப்புடன், 4 கிளை கள், 5 கரனை, அடியில் ஒரு தட்டு டன் கூடியதாக வடிவமைக்கப்பட்ட இந்த விளக்கின் மேல் அன்னப் பறவை பொருத்தப்பட்டிருந்தது. இவ்விளக்கு 12 நாட்களில் வடிவமைக்கப்பட்டதாகும்.

இதேபோல, 3 அடி உயரம் கொண்ட சரஸ்வதி நடனமாடும் தஞ்சாவூர் ஓவியம் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. கண்ணாடி யில் வரையப்படும் இத்தகைய ஓவியத்தைப் பலகைப் படம் என்றும் அழைப்பார்கள். இதை உரு வாக்க 45 நாட்கள் ஆனது. கல்வி யின் சிறப்பை உணர்த்தும் வகையிலான படம் இது.

இதுகுறித்து நாச்சியார்கோவில் பூம்புகார் பித்தளை, வெண்கல பொருட்கள் உற்பத்தி நிலைய மேலாளர் அருணாச்சலம் கூறியது:

தஞ்சாவூர் என்றாலே கலையும், பாரம்பரியமும்தான். சோழர்கள் காலத்தில் இருந்து சீனர்களுக்கும், தஞ்சாவூர் மக்களுக்குமான நெருக்கம் அதிகம். உலக அளவில் தஞ்சாவூர் கலைத்தட்டு, ஓவியங் கள், நாச்சியார்கோவில் குத்து விளக்குகள் தனித்துவம் வாய்ந்த வையாக பார்க்கப்படுகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி, சீன அதிபருக்கு நாச்சியார்கோவில் விளக்கையும், தஞ்சாவூர் ஓவியத்தையும் நினைவுப் பரிசாக வழங்கியது மிகவும் பெருமையாக உள்ளது. விளக்கை உற்பத்தி செய்த தொழிலாளர்கள், உற்பத்தி யாளர்கள் என ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் இதன் மூலம் மதிப்பு கூடியுள்ளது.

நாச்சியார்கோவில் விளக்கின் பெருமை சீன தேசத்தில் பேசப் படும் என்பதில் எங்களுக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக் கும் பெருமையான ஒன்று என்றார்.

அதேபோல் கோவை மாவட் டம் சிறுமுகையில் உள்ள ராம லிங்க சௌடாம்பிகை நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி சங்க நெச வாளர்கள், ஜின்பிங் படத்துடன் கூடிய கைத்தறி பட்டாடையை தயாரித்தனர். தமிழர்களின் பாரம் பரியக் கலையை எடுத்துக்காட்டும் இந்தப் பொன்னாடை, தமிழக அரசு சார்பில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஜி ஜின்பிங்குக்கு தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு நிறுவனமான பூம்புகார் சார்பில் தயாரிக்கப்பட்ட நாச்சியார்கோவில் அன்னம் விளக்கு, தஞ்சாவூர் நடனமாடும் சரஸ்வதி ஓவியம் ஆகியவற்றை பிரதமர் மோடி நினைவுப் பரிசாக வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x