இளநிலை பட்டப்படிப்பு; மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி- ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்க திட்டம்

இளநிலை பட்டப்படிப்பு; மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி- ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்க திட்டம்
Updated on
1 min read

சென்னை

பொறியியல், சட்டம் உட்பட பல்வேறு துறைகளில் இளநிலை பட்டப்படிப்பு பயிலும் சிறந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மனித வளத் துறை சார்பு செயலாளர் ரத்னேஷ் குமார் குப்தா வெளியிட்ட அறி விப்பு:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சமூக அறிவியல், மனிதநேயம், அறிவியல், மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், பொறியியல், சட்டம் ஆகிய துறைகளில் ஒருங் கிணைந்த முதுநிலை அல்லது இளநிலை பட்டப்படிப்பு படிக் கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இணையம் மூலம் விண்ணப்பம்

இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் https://mhrd.gov.in/ என்ற இணையதளம் மூல மாக விண்ணப்பிக்கலாம். இதற்கு உயர் சிறப்பு கல்வி நிறுவன அந் தஸ்து பெற்ற கல்வி மையங் கள், மத்திய அரசின் தேசிய தரவரிசைப் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் பல்கலைக்கழகங்கள், கல்லூரி களில் பயிலும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

4 பருவத் தேர்வுகளில் தேர்ச்சி

விண்ணப்பிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அல்லது 4 பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வேலைவாய்ப்பு பயிற்சிகள் டிசம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளன. துறைகளைச் சார்ந்து மாணவர்களுக்கு 2 முதல் 6 மாதங்கள் வரை பயிற்சிக் காலம் இருக்கும். ஒரு சுற்றுக்கு 15 பேர் வரை தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சிக் காலம் முடிந்தபின் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். கூடுதல் தகவல் களை மேற்கண்ட இணையதளத் தில் இருந்து தெரிந்துகொள்ள லாம்.

இவ்வாறு மனித வளத் துறை சார்பு செயலாளர் ரத்னேஷ் குமார் குப்தா வெளியிட்ட அறி விப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in