தங்கம் பவுனுக்கு ரூ.136 குறைவு

தங்கம் பவுனுக்கு ரூ.136 குறைவு
Updated on
1 min read

சென்னை

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.136 குறைந்து ரூ.29,224-க்கு விற்பனை செய்யப் பட்டது.

சர்வதேச அளவில் கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்தது. இதனால், உள்ளூரிலும் தங்கம் விலை சிறிய அளவில் குறைந்து காணப்பட்டது. சென்னையில் 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.136 குறைந்து ரூ.29, 224-க்கு விற்கப்பட்டது.

22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 653-க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 670-க்கு விற்கப்பட்டது. இதனால், சென்னையில் நேற்று மாலைக்கு பிறகு நகைக்கடைகளில் கூட்டம் சற்று அதிகரித்திருந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in