

சென்னை
நான் நடிகர் சூர்யாவின் ரசிகை அவரது சிங்கம் படத்தை மிகவும் விரும்பி பார்த்தேன் அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன் என சீன வானொலி தமிழ் பிரிவு தலைவர் கலைமகள் தெரிவித்துள்ளார்.
சீனாவில் பிரபலமாக இயங்கும் வானொலி தமிழ் பிரிவு அனைவராலும் ரசிக்கப்படும் ஒன்றாகும். தமிழை மிக அழகாக உச்சரிக்கும் சீன வானொலி தொகுப்பாளர்கள் மற்றும் அதன் தலைவர் கலைமகள் மிகவும் பிரபலமானவர்கள்.
சென்னைக்கு சீன அதிபர் வருகை தருவதையொட்டி தமிழ் வானொலி பிரிவினரும் சென்னைக்கு வந்துள்ளனர். அவர்கள் சென்னையில் ஊடகத்தினரை சந்தித்தனர் . இந்த நிகழ்ச்சியையொட்டி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கலைமகள் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.
அதில் சினிமாத்துறை குறித்த கேள்விக்கு அவர் சுவாரஸ்யமாக பதிலளித்தார். சீனாவில் தமிழ் திரைப்படங்களுக்கு வரவேற்பு எப்படி உள்ளது என்று கேட்டப்போது நிறைய உள்ளது என்று தெரிவித்த அவர் ரஜினியின் எந்திரன் 2 திரைப்படம் சீனாவில் திரையிடப்பட்டது குறித்து சொன்னார்.
தான் டிவிடி மூலமாக ஏராளமான தமிழ் படங்களை பார்த்துவிடுவேன் என்று தெரிவித்தார். உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் என்ற கேள்விக்கு எனக்கு நடிகர் சூர்யாவை மிகவும் பிடிக்கும், அவர் நடித்த சிங்கம் படம் அனைத்தையும் பார்த்துள்ளேன் அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன் ஆனால் முடியவில்லை என்று தெரிவித்த அவர் ஹலோ சூர்யா எப்படி இருக்கிறீர்கள் என்றார்.
நடிகர் சூர்யா நடித்த சிங்கம் படம் 3 பாகங்களாக வெளி வந்தது. இதற்கு முன் போலீஸ் அதிகாரிகள் என்றால் வேறு நடிகர்களை குறிப்பிட்ட காலம் இருந்த நிலையில் சிங்கம் படத்திற்குப்பின் பெரிய சிங்கம் பட அதிகாரி இவர் என்று மக்கள் பேசுமளவுக்கு சிங்கம் படத்தில் சூர்யா நடித்து அனைவரையும் கவர்ந்துவிட்டார்.
பல காவல் அதிகாரிகள் குறிப்பாக சில இளம் ஐபிஎஸ் அதிகாரிகளே அதுபோன்று பாவித்து நடப்பதும் காவல்துறையில் நடக்கும் நிகழ்வாக உள்ளது.