

கேரளாவில் தெரு நாய்களை கொல்லும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் நடிகர் விஷால் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே விலங்குகள் நல ஆர்வலர்கள் நேற்று உண்ணா விரதப் போராட்டம் நடத்தினர். இதுபற்றி ‘பிஎஃப்சிஐ’ விலங்குகள் நல அமைப்பின் தலைவர் அருண் பிரசன்னா கூறியதாவது:
கேரளாவில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அவற்றால் அதிகம் தொல்லை ஏற்படுகிறது என்று கூறி, அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கூண்டோடு அழிக்கும் முயற்சியில் அம்மாநில அரசு இறங்கியுள்ளது. நாய்கள் எண்ணிக்கையை கட்டுப் படுத்த அறுவை சிகிச்சை முறை யை கையாள வேண்டுமே தவிர, கொல்லக்கூடாது. அந்த முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுகிறது.
இக்கோரிக்கையை வலியு றுத்தி ஆயிரக்கணக்கான விலங் குகள் நல ஆர்வலர்கள் கையெழுத் திட்ட கடிதத்தை கேரள முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் சம்பந்தப் பட்ட அரசுத் துறை அதிகாரிகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் விஷால் பங்கேற்பு
உண்ணாவிரதப் போராட்டத் தில் பல்வேறு விலங்குகள் நல ஆர்வலர்கள், நடிகர்கள் பங்கேற் றனர். நடிகர் விஷால் கூறியபோது, ‘‘விலங்குகளை கொல்லக்கூடாது என சட்டமே உள்ளது.சட்டத்தை கடை பிடியுங்கள் என்றுதான் வலியுறுத்துகிறோம்.எண்ணிக்கையை கட்டுப்படுத்த நாய்களை கொல்லக்கூடாது. அதற்கு பதிலாக, அடைப்பிட பராமரிப்பு, கருத்தடை அறுவை சிகிச்சை போன்ற நடவடிக்கை களை மேற்கொண்டு, சட்டப்படி தீர்வு காண வேண்டும்’’ என்றார்.