ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விதிகளில் திருத்தம்: புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டது

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விதிகளில் திருத்தம்: புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டது
Updated on
1 min read

சென்னை

ஆசிரியர் பொது மாறுதல் கலந் தாய்வு தொடர்பான புதிய வழி காட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்.

அதன்படி நடப்பு ஆண்டு கலந்தாய்வு விதி முறைகளில் ஒரே பள்ளியில் குறைந்தது 3 ஆண்டுகள் பணி புரிந்தவர்களுக்கு மட்டும் இட மாறுதல் தரப்படும் என பள்ளிக் கல்வித்துறைஅறிவித்திருந்தது. இதை தளர்த்தக் கோரி நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இதனால் கலந்தாய்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி கலந்தாய்வை நடத்த பள்ளிக் கல்வித் துறைக்கு உயர்நீதி மன் றம் உத்தரவிட்டது. அதையேற்று வழக்கு தொடர்ந்த ஆசிரியர் களுக்கு மட்டும் விதியை தளர்த்தி திருத்தப்பட்ட வழிகாட்டு நெறி முறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பின்படி

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறப் பட்டுள்ளதாவது:

நடப்பு கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் கடை பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பின்படி திருத் தம் செய்து வெளியிடப்படுகிறது. அதன்படி கண்பார்வையற்றவர் கள், 40 சதவீதத்துக்கு மேல் உடல் குறையுடைய மாற்றுத் திறனாளி கள், சிறுநீரகம் பாதிக்கப் பட்டவர் கள், புற்றுநோயாளிகள் உள்ளிட் டோருக்கு மட்டும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றிருக்க வேண்டும் என்ற விதியானது தளர்த்தப்படுகிறது. நடப்பு ஆண்டு மட்டுமே இந்த தளர்வு பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு பின் ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in