சீன அதிபர் வருகையால் 11, 12-ம் தேதிகளில் கைதிகளை ஆஜர்படுத்துவதில் விலக்கு அளிக்க வேண்டும்: நீதிமன்றத்துக்கு காவல் ஆணையர் கடிதம்

சீன அதிபர் வருகையால் 11, 12-ம் தேதிகளில் கைதிகளை ஆஜர்படுத்துவதில் விலக்கு அளிக்க வேண்டும்: நீதிமன்றத்துக்கு காவல் ஆணையர் கடிதம்
Updated on
1 min read

சென்னை

சீன அதிபர் வருகையால், 11, 12-ம் தேதிகளில் விசாரணைக் கைதி களை நீதிமன்றங்களில் ஆஜர் படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று முதன்மை அமர்வு நீதிமன்றத்தை சென்னை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு எழுதி யுள்ள கடிதத்தில் கூறியிருப் பதாவது:

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் வருகையை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே புழல் மத்தியச் சிறையில் உள்ள விசாரணைக் கைதிகளை பல்வேறு அமர்வு நீதிமன்றங்களுக்கு 11, 12-ம் தேதிகளில் அழைத்துச் செல்வதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவது கடினம். எனவே, 2 நாட்கள் மட்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ள வழக்கு களை வேறொரு தேதிக்கு தள்ளி வைக்குமாறு சம்பந்தப்பட்ட அமர்வு நீதிமன்றங்களுக்கு அறி வுறுத்த வேண்டும்.

நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டிய தேவை உள்ள வழக்கு களில், வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் விசாரணைக் கைதிகளை ஆஜர்படுத்த உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு புழல் சிறைக் கண் காணிப்பாளரை கேட்டுக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in