

சென்னை
சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக இருந்தவர் சிவகுமார் (55). இவர் புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் வீட்டில் இருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி வந்துள் ளது. அவரை குடும்பத்தினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிவக்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிவகுமாருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகள் களும், ஒரு மகனும் உள்ளனர்.
காவலர்களுக்கும் சங்கம் வேண்டும் என்பதை வலியுறுத்தி 2001-ல் ‘தமிழ்நாடு காவல்துறை காவலர் சங்கம்’ என்ற பெயரில் சங்கம் தொடங்கினார். இந்த சங்கத்துக்கு அங்கீகாரம் பெற பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தார். டிஜிபியிடம் நேரில் சென்று மனு அளித்தார். நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து அதை தொடர்ந்து நடத்தி வந்தார்.
கடந்த 18 ஆண்டுகளாக போலீஸ் சங்கத் துக்கு அங்கீகாரம் கேட்டு போராடி வந்த சிவகுமாரின் உயிரிழப்பு தங்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு என போலீஸார் தெரிவித்துள்ளனர்.