

ஈரோடு
சீன பொருட்களுக்கு இந்திய சந்தையை திறந்து விடக் கூடாது என கொங்கு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்துக்கு வரும் சீன அதிபரை வரவேற்கிறோம். அமெ ரிக்கா உடனான வர்த்தக உறவு களில் பிரச்சினைகள் ஏற்பட்டதை சரிசெய்வதற்காக, இந்தியாவுடன் உறவாட சீனா விரும்புகிறது. அமெரிக்க வர்த்தக இழப்பை சரிகட்ட சீனா முயற்சித்து வரும் நிலையில், சீன பொருட்களுக்கு இந்திய சந்தையை திறந்து விடக்கூடாது
உலகத்திலேயே மிகப்பெரிய வலுவான உற்பத்தித் துறையை கொண்டது சீன நாடு. உற்பத்தி செய்கின்ற பொருட்களை ஏற்று மதி செய்ய முடியவில்லை என் றால் சீன பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். பொருட்களை விற்ப தற்கு இந்தியா உலகிலேயே மிகப் பெரிய சந்தை என்பது அனைத்து நாடுகளுக்கும் தெரியும்.
இந்த சந்திப்பு, சீனாவில் உற் பத்தியாகும் பொருட்களை இந்தி யாவில் விற்பதற்கு வழிவகை செய்யுமானால், அது இந்திய உற் பத்தித் துறைக்கு பின்னடைவாக அமையும்.
காஷ்மீர் பிரச்சினையில் சீனா வின் தலையீடு இல்லை என்று அறிவித்து நமக்கு மகிழ்ச்சி உண்டாக்குவதுபோல செய்து விட்டு, பாகிஸ்தான் பொருட்கள் இறக்குமதிக்கு சீனாவில் வரி கிடையாது என்று அறிவித்திருப் பது வர்த்தக ரீதியாக இந்தியா வுக்கு எதிரான நிலையாகும். பாகிஸ்தானுக்கு ஆதரவான சீனாவின் இந்த அறிவிப்பு பொருளாதாரரீதியாக பாகிஸ் தான் வளர உதவும். இந்த சூழ் நிலையில்தான் சீன அதிபர் நட்பு வேண்டி இந்தியாவுக்கு வருவ தால், பிரதமர் மோடி கவனத்தோடு கையாள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் ஈஸ்வரன் கூறியுள்ளார்.