‘திறந்த வெளியில் மலம் கழிக்காதீங்க..!'- பாடல்கள் மூலம் பட்டிதொட்டிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மூதாட்டி

பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு பாடலைப் பாடும் மூதாட்டி நீலாவதி.
பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு பாடலைப் பாடும் மூதாட்டி நீலாவதி.
Updated on
1 min read

கடலூர்

‘திறந்த வெளியில் மலம் கழிக்கக் கூடாது' என்று கிராமப் பகுதிகளில் பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் மூதாட்டி ஒருவர். இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சிதம்பரம் வட்டம் பொன்னங் கோயில் கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் என்பவரின் மனைவி நீலாவதி (60). விவசாய கூலி தொழிலாளி. இவர், ‘திறந்த வெளி யில் மலம் கழிக்கக் கூடாது; அப்படி திறந்த வெளியில் அமர் வதால் சுகாதாரச் சீர்கேடுகள் அதிக அளவில் பரவும்; விஷ ஜந்துக்கள் கடித்து உயிர் போகும் நிலை உருவாகும்' என்று தமிழ் சினிமா பாடல் மெட்டுகளில், புது வார்த்தைகளைப் போட்டு பாடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இது கிராம மக்களிடம் வர வேற்பை பெற்றுள்ளது. அவர் பாடும் வீடியோ காட்சிகள் தற் போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இதுகுறித்து நீலாவதியிடம் கேட்டபோது, "பல ஆண்டுகளாக கிராமங்களில் உள்ள மக்கள் திறந்த வெளியில் மலம் கழித்து வருகின்றனர். இதுகுறித்து அரசு அதிகாரிகள் பலமுறை எடுத் துக் கூறியும் மக்கள் சுகாதார மான கழிவறையை நடை முறைப்படுத்தவில்லை. கழிவறை கட்ட அரசு பணம் தருகிறது. அப் படிஇருந்தும் இது தொடரவே செய்கிறது.

எனவே, இதை பாட்டுடன் சொன்னால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். அதற்காக எல்லோருக்கும் அறிமுகமான சினிமா பாடல்களை தேர்வு செய் தேன்.

அந்தப் பாடல்களை மாற்றி, திறந்தவெளியில் மலம் கழித்தால் ஏற்படும் அவலத்தை, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் பாடி வருகிறேன். சிதம்பரம் கிராமப் பகுதிகளில் நடவு நடும் இடம் உள்ளிட்ட வேலை செய்யும் பல இடங்களில் இந்த பாடலை பாடி வருகிறேன்" என்றார்.

சொந்தமாக வார்த்தைகளைப் போட்டு, எளிய பாடல்களாக கட்டமைத்து இப்படிப் பாடும் மூதாட்டி நீலாவதிக்கு, எழுதப் படிக்கத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in