Published : 10 Oct 2019 10:36 AM
Last Updated : 10 Oct 2019 10:36 AM

விவசாயிகள் மரம் வளர்க்க வழிகாட்டும் வனத்துறை செயலி: இதுவரை 30 ஆயிரம் பேர் பதிவிறக்கம்

க.சக்திவேல்

கோவை

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும், வர்த்தக ரீதியாகவும் மரங்களின் தேவை அதிகரித்து வருகிறது. மரம், வனப்பரப்பை அதிகரிக்க வரு வாய் நிலங்களில் மர வளர்ப்பை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனியார் நிலங்களில் மரவளர்ப்பை ஊக்குவிக்க தமிழக வனத்துறையும் மர வளர்ப்பு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.

இதன் ஒருபகுதியாக, தமிழ்நாடு புதுமை முயற்சி திட்டத்தின்கீழ் தமிழக வனத்துறையால் தமிழக மரக்களஞ்சியம் (Tamilnadu Treepedia) எனும் மென்பொருள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மென்பொருளில் விவசாயிகள் எளிதாக மரப்பண்ணையம் மேற் கொள்ளத் தேவையான அனைத்து தகவல்களும் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. இதன்மூலம், தங்கள் தேவைக்கேற்ற, இடத்துக்கேற்ற, மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்து பயிரிடலாம்.

இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும்போது மட்டும் இணைய தள இணைப்பு இருந்தால்போதும். பதிவிறக்கம் செய்த பிறகு இணைய தள இணைப்பு இல்லாமல் ஆஃப் லைனிலேயே பயன்படுத்தலாம். இதுவரை சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இந்த செயலி உருவாக காரண மாக இருந்தவர்களில் ஒருவரான வண்டலூர் உயிரியல் பூங்காவின் துணை இயக்குநர் சுதா ராமன் கூறியதாவது:

வர்த்தக ரீதியாக குறிப்பிட்ட மர வகைகள் மட்டுமே பரவலாக வளர்க்கப்படுகிறது. பெரும்பாலான நாட்டு மரங்கள் குறித்து விழிப்புணர்வு இல்லை. எனவே, பொருளாதார முக்கியத்து வம் வாய்ந்த மற்ற மரங்களை அடையாளம் காணவும், அவற்றின் நடவு தொழில்நுட்பத்தை தொகுத்து வழங்கவும் இந்தமென்பொருளை உருவாக்கியுள்ளோம். கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து TamilNadu Treepedia செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆன்டிராய்ட் செல்போன், ஐபோன் ஆகிய இரண்டிலும் இந்த செயலி இயங்கும். தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

150 வகை மரங்கள்

நெல்லி, ஈட்டி, பெருங்கொன்றை, வெள்ளை அத்தி, கடுகாய், கரு வாகை, கருங்காலி, வெக்காளி, மகிழ மரம் என 150 வகையான மரங்களின் பொதுப்பண்புகள், எந்த மண்ணில் நன்றாக வளரும், வளர்ப்பின் வழிமுறைகள், அதன் பயன்கள் போன்றவை செயலியில் உள்ளன.

இதில், பெரும்பாலா னவை நாட்டு மரங்கள். மேலும், மரங்களை ஆன்மிக மரங்கள், எரிபொருள் மற்றும் எண்ணெய் மரங்கள், கூழ் மரங்கள், தோட்டக்கலை மரங்கள், பெரு மரங்கள், மருத்துவ மரங்கள் என 19 வகையாக வகைப்படுத்தியுள் ளோம். இதிலிருந்து, தங்களுக் கேற்ற மரங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

குறைந்த ஆண்டு களில் அதிக லாபம் தரக்கூடிய மரங் கள் எவை என்பதையும், ஊடுபயி ராக எந்த பயிரை பயிரிடலாம் என்பதையும் செயலியில் அறிந்து கொள்ளலாம். மாவட்டங்கள் வாரி யாக மண்ணிற்கேற்ற மர வகைகள் பிரித்து தொகுக்கப்பட்டுள்ளது. இது தவிர, www.tntreepedia.com/ta/tutorial/ என்ற இணையதளத்தில் மர வளர்ப்பு, பராமரிப்பு குறித்த செயல்முறை விளக்கங்களை வீடியோக்களாக பதிவேற்றம் செய்துள்ளோம்.

கன அளவு கணக்கீடு

உயிருடன் உள்ள மரம், வெட்டப் பட்ட மரத்தின் கன அளவை கணக்கிட கால்குலேட்டர் வசதியும் செயலியில் உள்ளது. இதில், மரத் தின் உயரம், சுற்றளவு உள்ளிட்ட விவரங்களை பதிவிட்டு கன அளவை விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம். நிலத்தின் பரப்பள வுக்கு ஏற்ப எத்தனை நாற்றுகள் தேவை என்பதையும் கால்குலேட்ட ரில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள அருகிலுள்ள எந்த வனத் துறை அலுவலகத்தை அணுகலாம் என்பதற்கான தொடர்பு எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மரம் வளர்ப் பவர்களின் கருத்துகள், கேள்வி களை சமர்ப்பிக்கவும் செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x