Published : 10 Oct 2019 10:31 AM
Last Updated : 10 Oct 2019 10:31 AM

தன் வாழ்க்கையையே செய்தியாக்கினார் காந்தி- பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் கருத்து

கோவை

தன் வாழ்க்கையையே செய்தியாக் கினார் மகாத்மா காந்தி என்றார், பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர்.

மகாத்மா காந்தி பிறந்த நாளை யொட்டி கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் ‘காந்தி ‘யார்' - நேற்று, இன்று, நாளை' என்ற நிகழ்ச்சி கோவையில் நடை பெற்றது. இதில், பட்டிமன்றப் பேச் சாளர் பாரதி பாஸ்கர் பேசியதாவது:

கோவை கோனியம்மன் கோயில் தேர்த் திருவிழாவின்போது ஆட்டுக் கிடாவை பலிகொடுப்பது சடங்காக இருந்தது. ஆனால், 1941 மார்ச் 17-ம் தேதி காந்தியின் அறிவுரையை ஏற்று, ஆட்டுக்கிடா பலி கொடுக்கும் சடங்கை கைவிட்டு, தேர் பவனி நடைபெற்றது.

இதற்காக, அவ்விழா ஏற்பாட்டாளர்களுக்கு மகாத்மா காந்தி பாராட்டுத் தந்தி அனுப்பியுள்ளார்.

சொற்களைக் கடந்து காந்தி, தானே ஒரு செய்தியாக இருந்துள் ளார். அவரது வாழ்க்கையையே மக்களுக்கு செய்தியாக்கினார். காந்தியை எந்த அளவுக்கு விரும் பினார்களோ, அந்த அளவுக்கு வெறுக்கவும் செய்தார்கள். ஆனால் காந்தியை புரிந்துகொண்டால் நேற்று, இன்று, நாளை என எந்த நாளைக்குமானவராக நம்மி டையே இருப்பார். காந்தியைப் புரிந்துகொள்ள, அவரது வாழ்க் கையை, காந்தி குறித்த எழுத்து களைப் படிக்க வேண்டும். படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

அடுக்கு மொழியில், அலங்கார சொல்லைக் கொண்டு பேசியவ ரல்ல காந்தி. ஆனால், மைக் வசதிகூட இல்லாத நேரத்திலும், அவரது பேச்சைக் கேட்க பெரும் கூட்டம் இருந்தது. தீண்டாமை கூடாது, மது அருந்தக் கூடாது, யாரும் எதிரி அல்ல, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, அகிம்சை என ஐந்து விஷயங்களை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்.

காந்தியின் வாழ்க்கை திறந்த புத்தகம். ஒளிவுமறைவு என்பதே அவரது வாழ்க்கையில் கிடையாது. அவர் வாழ்வில் யாரையும் புண் படுத்திப் பேசியதில்லை, யாரை யும் ஒதுக்கியதில்லை, கடுஞ்சொல் கூறியதில்லை. சின்ன சின்ன விஷயங்களிலும் மிக கவனமாக இருந்தவர். அதேபோல, வாழ்வில் சின்ன சின்ன விஷயங்களையும் சரியாக செய்யக் கூடியவராக இருந்தார்.

இன்றைய தலைமுறையினர் அதிக உணவை வீணாக்குகின்ற னர். ஆனால், காந்தி தன் தேவைக்கு மேல் உணவு உட்கொள்ளவில்லை. எந்த பொருளையும் தன் தேவைக்கு மேல் தன்வசம் வைத்துக் கொள்ள வும் இல்லை. வாழ்நாள் முழுவதும் எளிமையான ஆடையைத்தான் உடுத்தினார்.

தன் பிள்ளைகளிடம் சின்ன சின்ன விஷயங்களுக்கும் கடுமை யாக நடந்து கொண்டார் என்று கூறுவார்கள். சின்ன சின்ன விஷ யங்களைக்கூட சரியாக செய்ய முடியாதவர்கள், பெரிய விஷயங் களை செய்யவே மாட்டார்கள் என்று காந்தியே அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

நிறைய நகைகளுடன் ஒரு பெண் எப்போது தைரியமாக நடமாடுகிறாரோ, அப்போதுதான் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததாக கூறினார் காந்தி. அதை, இன்றைய காலத்துக்குப் பொருத்திப் பார்க்க வேண்டுமென்றால், ஒருவர் கூறிய கருத்து நமக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அவரது உணர்வை, உரிமையைப் பாதுகாக்கிறேன் என்று ஒருவர் எப்போது கூறுகிறாரோ, அப்போதுதான் காந்தி இந்த மண்ணில் இருந்தார் என்பதற்கான அர்த்தம் நீடிக்கும்.

ஆனால், ஒருவர் கூறிய கருத் துக்கு எதிர்வினை, மனம் புண்படும் படியாக கூறும் சமூகமாகவே இப்போதும் உள்ளது வேதனையளிக்கிறது. இவ்வாறு பாரதி பாஸ்கர் பேசினார்.

நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் தேச பக்திப் பாடல்களைப் பாடினர். விழாவில், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன், விஜயா பதிப்பகம் உரிமையாளர் மு.வேலாயுதம், கங்கா மருத்துவமனை தலைவர் டாக்டர் சண்முகநாதன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x