தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,547 வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,547 வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்
Updated on
1 min read

சென்னை

வழக்கறிஞர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1,547 வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே வழக் கறிஞர்களாக நீதிமன்றங்களில் பணிபுரிய முடியும். தகுதித்தேர் வில் தேர்ச்சி பெறாதவர்கள் இடை நீக்கம் செய்யப்படுவர். இந்த நடைமுறை கடந்த 2010 முதல் அமலில் இருந்து வருகிறது. சட்டப்படிப்பை முடித்து வழக் கறிஞர்களாக பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் 2 ஆண்டு களில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்நிலையில் இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,547 வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜகுமார் இடை நீக்கத்துக்கான நோட்டீஸ் பிறப் பித்துள்ளார். அந்த நோட்டீஸில் இடைநீக்க நடவடிக்கையை தவிர்க்க தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றமைக்கான சான்றிதழ்களை உடனடியாக பார் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in