

சென்னை
தென்மேற்கு பருவக் காற்று ராஜஸ் தானில் இருந்து விலகத் தொடங்கி யுள்ளது. அதன் காரணமாக அக் டோபர் 20-ம் தேதி தமிழகத் தில் வடகிழக்கு பருவக் காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக தென்மேற்கு பருவக்காற்று செப்டம்பர் 1-ம் தேதி வாக்கில் ராஜஸ்தான் மாநில பகுதி களில் இருந்து விலகத் தொடங் கும். ஆனால் இந்த ஆண்டு 39 நாட்கள் தாமதமாக நேற்று விலகத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவி யரசன் கூறியதாவது:
தென்மேற்கு பருவக் காற்று ராஜஸ்தானில் விலகத் தொடங்கி இருப்பதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் சில தினங்களுக்கு எங்கும் மழை இல்லாத நிலை, வெப்பநிலை குறைந்திருப்பது, காற்று வீசும் திசையில் மாற்றம், இயல்புக்கு மாறாக கடிகார முள் சுற்றும் திசையில் காற்று சூழல்வது போன்ற அறிகுறிகள் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது படிப் படியாக ஹரியாணா, டெல்லி, ஆந்திர பிரதேசம் வழியாக தமிழகத் தில் இருந்து விலகும். 20-ம் தேதி வாக்கில் வடகிழக்கு பருவக்காற்று வீசத் தொடங்குவதற்கான சாதக மான சூழல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7 மாவட்டங்களில் கனமழை
தமிழகத்தில் அடுத்த இரு நாட் களுக்கு வெப்பச் சலனம் காரண மாக மதுரை, திண்டுக்கல், சேலம், நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் கரூர், திருச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு களின்படி அதிகபட்சமாக திண்டுக் கல் மாவட்டம் கொடைக்கானலில் 8 செமீ, தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் 7 செமீ, கோவை மாவட்டம் வால்பாறை, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.