

கோவை
கோவையில் சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி ரூ.6 கோடி மோசடி செய்த, சுற்றுலா நிறுவனத் தின் உரிமையாளரை பிடிக்க விமான நிலையங்களுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கி காவல்துறை யினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.
கோவை புது சித்தாப்புதூரில் சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்த மான சுற்றுலா நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தின் சார்பில் சீரடி, கோவா, மும்பை உள்ளிட்ட பகுதி களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடு களுக்கும் சுற்றுலா அழைத்துச் செல் வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பி, கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்நிறுவனத்திடம் தனியாகவும், குழுவாகவும் தொகையை கட்டினர். இந்நிறுவனத்தினர் சுற்றுலாவுக் காக ரூ.12,500 முதல் ரூ.5 லட்சம் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், பணத்தை வசூலித்த நிறுவனத்தினர் கூறியபடி, சம்பந்தப்பட்டவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லவில்லை. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடந்த 23-ம் தேதி மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ரூ6 கோடி வரை வசூலித்து மோசடி செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இந்நிறுவனத்தின் உரிமையாளர் சுரேஷ்குமார், அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோர் மீது மோசடி, கூட்டுச்சதி பிரிவின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதற்கிடையே, இருவரும் வெளிநாட்டுக்கு தப்பி விடக்கூடாது என்பதற்காக, விமான நிலையங்களுக்கு ‘லுக்அவுட்’ நோட் டீஸ் வழங்கி காவல்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.
இதுகுறித்து மாநகர காவல்துறையினர் கூறும்போது, ‘‘சுரேஷ்குமார், மகேஸ்வரி ஆகியோரது விவரம், பாஸ்போர்ட் எண் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய லுக் அவுட் நோட்டீஸ் நாடு முழுவதும் உள்ள அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள் ளது. இவர்கள் பிடிபட்டால் உடனடி யாக தகவல் தெரிவிக்கவும் வலி யுறுத்தியுள்ளோம். இதற்கிடையே, இவர்களை தேடி தனிப்படைக் குழுவினர் சென்னையில் முகாமிட்டுள்ளனர்’’ என்றனர்.