Published : 09 Oct 2019 09:59 AM
Last Updated : 09 Oct 2019 09:59 AM

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 10 பேர் அனுமதி: அறிகுறிகள், பரிசோதனைகள் குறித்து டீன் விளக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் சிறப்பு வார்டு. படம்:ஜெ.மனோகரன்

கோவை

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள், தடுப்பு முறைகள் குறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையின் டீன் டாக்டர் பி.அசோகன் கூறியதாவது:

கடந்த ஜூலை மாதத்துக்கு பின் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதி கரித்துள்ளது. கோவை மட்டுமல்லா மல் திருப்பூர், நீலகிரியைச் சேர்ந்த வர்களும் கோவை அரசு மருத்துவ மனைக்குதான் சிகிச்சைக்காக வரு கின்றனர். டெங்கு வைரஸ் தாக்கம் ஏற்படும்போது பசியின்மை, அதிக உடல் சோர்வு, தலைசுற்றல், குறைந்த அளவு சிறுநீர் வெளியேற் றம், குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, வாய், பல் ஈறுகள், மூக்கில் ரத்தம் கசிதல், மலம் கருப்பாக வெளியேறு தல், மூச்சுவிடுவதில் சிரமம், மயக் கம் ஏற்படும். இவற்றில் ஏதேனும் ஓர் அறிகுறி இருந்தால், உடனடி யாக அருகில் உள்ள அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். சுயமாக அருகில் உள்ள மருந்தகங்களில் நேரடியாக மாத்திரைகள் வாங்கி உட்கொள்ளக்கூடாது.

டெங்கு வைரஸ் தாக்கம் இருந்தால் முதல் 5 நாட்களுக்கு காய்ச்சல் இருக்கும். அடுத்த மூன்று நாட்களுக்கு ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா வெளியேறி ஆபத்தை உண்டாக்கலாம். எனவே, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தால் காய்ச்சல் நின்ற பிறகு மூன்று நாட்கள் அல்லது மருத்துவர் கூறும் வரை மருத்துவமனையில் இருக்க வேண்டும். குழந்தைகளை காய்ச்சல் நின்ற பிறகு நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குப் பிறகே பள்ளிக்கு அனுப்ப வேண் டும். வேலைக்கு செல்வோரும் காய்ச்சல் நின்றபிறகு குறைந்தது 4 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். காய்ச்சலின்போது கஞ்சி, பழச்சாறு, இளநீர் மற்றும் உப்பு-சர்க்கரை கரைசல் (ஓஆர்எஸ்) போன்ற திரவ உணவுகளை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.

தண்ணீரை தேங்கவிடக்கூடாது

பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் டெங்கு பாதிப்பை முழு மையாக கட்டுப்படுத்த முடியாது. டயர்கள், சிமென்ட் தொட்டிகள், தேங்காய் ஓடுகள், குடம், வாளி, காலி பெயிண்ட் டப்பாக்கள், பிளாஸ்டிக் தட்டுகள், கப்கள், திறந்த நீர் தொட்டி, டிரம்களில்தான் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

எனவே, பயன்படுத்தாத பழைய பொருட்களை தண்ணீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண் டும். பயன்படுத்தும் தண்ணீர் தொட் டிகளை மூடி வைக்க வேண்டும். சிறிய இடத்தில் நல்ல தண்ணீர் தேங்கினாலும் ஏடிஎஸ் கொசுக்கள் அதில் முட்டையிட்டுவிடும். இந்த கொசுக்கள் பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும். எனவே, கொசுக்கடியில் இருந்து தப்பிக்க வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை தடவிக் கொள்ளலாம். குழந்தைகளை கொசு வலைகளுக்குள் தூங்க வைக்க வேண்டும்.

இலவச பரிசோதனை

டெங்கு காய்ச்சல் அறிகுறி களோடு இருப்பவர்களுக்கு ஐ.ஜி.எம்., எலிசா பரிசோதனை கள் கோவை அரசு மருத்துவமனை யில் இலவசமாக மேற்கொள்ளப்படு கிறது. ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை எவ்வளவு உள்ளது என பரிசோதிக்கப்படுகிறது. மருத்துவமனைக்கு வருவோ ருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டுவருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x