

திருவள்ளூர்
காய்ச்சலால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை கூடுதல் இயக்குநர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக காய்ச்சலால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது. இதன் காரணமாக, திருவள் ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், புறநோயாளி கள் மற்றும் உள்நோயாளிகள் பிரி வில் நாள்தோறும் நூற்றுக்கணக் கானோர் சிகிச்சை பெற்று வருகின் றனர்.
91 பேருக்கு காய்ச்சல்
இதில், உள் நோயாளிகள் பிரிவில் காய்ச்சல் காரணமாக 91 பேரும், டெங்கு காய்ச்சல் அறிகுறி காரணமாக 6 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சூழலில், திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை கூடுதல் இயக்குநர்கள் சம்ஷத் மற்றும் குருநாதன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், மருத்துவ மனையில் அளிக்கப்படும் சிகிச் சைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்த கூடுதல் இயக்குநர்கள், மருத்துவமனை வளாகத்தை எப்போதும் தூய்மை யாக வைத்திருப்பதன் அவசியம், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சலுக்கு துரித சிகிச்சை அளிப்பதன் அவசியம் உள்ளிட் டவை குறித்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறி வுரைகள் வழங்கினர்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநர் தயாளன், மருத்துவமனை கண் காணிப்பாளர் மருத்துவர் ராஜ் குமார் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.