சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு மேல்முறையீடு உரிமை; 12 ஆண்டு சட்டப் போராட்டம் நடத்திய 90 வயது தலைமை ஆசிரியர்

வித்யாநந்தன்
வித்யாநந்தன்
Updated on
2 min read

கி.மகாராஜன்

மதுரை

சிறுபான்மைக் கல்வி நிறுவன ஆசிரி யர்களுக்கு நீதிமன்றங்களில் மேல் முறையீடு உரிமை கிடைக்க கார ணமாக இருந்திருக்கிறார் மதுரை யைச் சேர்ந்த 90 வயது தலைமை ஆசிரியர் ஒருவர். இவர், 12 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திய சட்டப் போராட்டம் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

மதுரை காமராஜர் சாலையில் உள்ள அரசு உதவிபெறும் மொழி சிறுபான்மை மேல்நிலைப் பள்ளி யில் 1953-ல் ஆசிரியராகப் பணி யாற்றியவர் வித்யாநந்தன். இவரைப் பள்ளி நிர்வாகம் 1977-ல் பணி நீக்கம் செய்தது. அந்தக் காலத்தில் அரசு உதவிபெறும் மதம், மொழிவாரி சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் நிர்வாகத்தின் நட வடிக்கைக்கு எதிராக எங்கும் மேல் முறையீடு செய்ய முடியாத நிலை இருந்தது.

இதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று வெற்றிபெற்ற வித்யாநந்தன், ஓய்வுபெற 7 மாதங்கள் இருந்த நிலையில் 1988-ல் மீண்டும் பணியில் சேர்ந்தார். ஓய்வுக்குப் பிறகு சட்டம் பயின்று வழக்கறிஞரானார். முதல் பணியாக அரசு உதவிபெறும் மொழி, மதச் சிறுபான்மைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக் கையுடன் உயர் நீதிமன்றக் கிளை யில் 2007-ல் பொதுநல வழக்குத் தாக்கல் செய்தார்.

அடுத்தடுத்து இவரது மனுக்கள் தள்ளுபடியாகின. இருப்பினும் மனம் தளராமல் 5-வது முறையாக உயர் நீதிமன்றத்தை நாடினார். அந்த மனுவும் தள்ளுபடியாக, அந்த உத்தரவை மறுசீராய்வு செய் யக்கோரி மனுத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், அரசிடமிருந்து ஊதியம் பெறும் சிறுபான்மைப் பள்ளிகள் உட்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் களுக்கும் ஊதியம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்கு எதிராக மேல்முறை யீடு செய்வதற்கு உரிமை வழங்கி, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தை 2018-ல் அரசு நிறைவேற்றியது.

இதன்மூலம் சிறுபான்மைக் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு மேல்முறையீட்டு உரிமைக்குத் தடையாக இருந்த, தமிழ்நாடு அங்கீ கரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டம்-1974 நீக்கப் பட்டுள்ளது. இந்தச் சட்டம் தற்போது தமிழக அரசின் அரசிதழில் வெளி யிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இதை உயர் நீதிமன்றத்தில் அரசு உறுதி செய்தது. அரசு இந்த சட் டத்தை இயற்ற வித்யாநந்தனின் 12 ஆண்டு கால சட்டப் போராட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.

தற்போது 90 வயதாகும் வித்யா நந்தன் இதுகுறித்து, ‘இந்து தமிழ் திசை'யிடம் கூறியதாவது: மேல் முறையீட்டு உரிமை இல்லாததால் அரசு உதவிபெறும் சிறுபான்மைப் பள்ளி நிர்வாகங்களால் ஆசிரியர் கள் பழிவாங்கப்பட்டனர். ஏராள மான ஆசிரியர்கள் நிவாரணம் கிடைக்காமலேயே இறந்துள்ளனர்.

இறப்பதற்கு முன்பு சிறுபான் மைப் பள்ளி ஆசிரியர்களுக்கு மேல்முறையீட்டுக்கான வாய்ப் பைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தேன். அது தற் போது நிறைவேறியுள்ளது. இந்தப் புதிய சட்டத்தில் மாநிலம் முழு வதும் சிறுபான்மைக் கல்வி நிறு வனங்களில் பணிபுரியும் 55 ஆயிரத் துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in