Published : 09 Oct 2019 07:52 AM
Last Updated : 09 Oct 2019 07:52 AM

வன்னியர்கள் கறிவேப்பிலை அல்ல என்பதை ஸ்டாலினுக்கு மக்கள் தீர்ப்பு உணர்த்தும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து

சென்னை

தேர்தலின்போது கொண்டாடவும், தேர்தல் முடிந்தவுடன் தூக்கி எறி வதற்கும் வன்னியர்கள் கறிவேப் பிலை அல்ல என்பதை காலமும், மக்கள் தீர்ப்பும் ஸ்டாலினுக்கு உணர்த்தும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர் களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும், மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட ஏராளமான வெற்று வாக்குறுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அள்ளி வீசியிருக்கிறார். விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் தோல்வியடைவது மட்டுமின்றி, வைப்புத் தொகைகூட வாங்க முடியாதோ என்ற அச்சம் தான் அவரை இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது.

வன்னியர்கள் உள்ளிட்ட மிக வும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தினருக்கு 20 சதவீத இடஒதுக் கீட்டை திமுகதான் வழங்கியதாக வும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப் போவதாகவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். 1989-ம் ஆண்டில் வன்னியர்களுக்கு திமுக அரசு இடஒதுக்கீட்டை எளிதாக தூக்கிக் கொடுத்துவிடவில்லை.

1980-ம் ஆண்டில் வன்னியர் சங்கங்களை ஒருங்கிணைத்து 9 ஆண்டுகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி, தொடர் சாலை மறியல் போராட்டத்தின்போது 21 சொந்தங்களின் இன்னுயிரை தியாகம் செய்து பெற்றதுதான் 20 சதவீத இடஒதுக்கீடு ஆகும். திமுக மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில்கூட வன்னியர் களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கவில்லை.

இடைத்தேர்தல் நடக்கும் விக்கிர வாண்டி தொகுதி அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் அமைப்பு ரீதியாக உள்ள 3 மாவட்டங்களில், ஒன்றில்கூட வன்னிய சமுதாயத் தைச் சேர்ந்தவர்களை மாவட்டச் செயலாளர்களாக ஸ்டாலின் நியமிக்கவில்லை. முழுக்க முழுக்க வன்னியர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஸ்டாலின், இப்போது திடீரென தம்மை வன் னியர்களின் தோழன் என்று கூறிக் கொண்டால் அதை நம்பி ஏமாற வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல.

தேர்தலின்போது கொண்டாட வும், தேர்தல் முடிந்தவுடன் தூக்கி எறிவதற்கும் வன்னியர்கள் கறி வேப்பிலை அல்ல என்பதை கால மும், மக்கள் தீர்ப்பும் ஸ்டாலினுக்கு உணர்த்தும். தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தச் செய்வதன் மூலம் வன்னி யர்களுக்கான தனி இடஒதுக்கீட்டை 2021 தேர்தலுக்கு முன்பாகவே வென்றெடுக்கும் சக்தி பாமகவுக்கு உண்டு.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x