முதலீடுகள் வந்துள்ளதாக சொல்வது பொய்; தமிழக முதல்வரும், அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றனர்: நாங்குநேரியில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவு கேட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாளையஞ்செட்டிகுளம் கிராமத்தில் நேற்று வாக்கு சேகரித்தார். படம்: மு.லெட்சுமி அருண்
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவு கேட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாளையஞ்செட்டிகுளம் கிராமத்தில் நேற்று வாக்கு சேகரித்தார். படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

திருநெல்வேலி

``தமிழக முதல்வரும், அமைச்சர் களும் சுற்றுலா பயணிகள்போல் ஊர் சுற்றிப்பார்க்க வெளிநாடு களுக்கு சென்று திரும்பியுள்ளனர். தமிழகத்துக்கு முதலீடுகள் வந் துள்ளதாக அவர்கள் பொய்யான தகவல்களை கூறுகின்றனர்” என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பாளையஞ்செட்டிக் குளம், மேலக்குளம், அரியகுளம் பகுதி மக்களைச் சந்தித்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு, மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டினார். இப்பகுதி களில் மக்களோடு மக்களாக அமர்ந்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். குடிநீர், சாலை, பேருந்து வசதிகள், தொழில் வளர்ச்சி இல்லாதது, மகளிர் குழுக் களுக்கு கடனுதவி கிடைக்காதது, முதியோருக்கு உதவித் தொகை கிடைக்காதது குறித்து, இப்பகுதி மக்கள் அவரிடம் முறையிட்டனர்.

குறை கேட்டார்களா?

``திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த குறைபாடுகள் எல்லாம் தீர்க்கப்படும்” என்று, அப்போது மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட் பாளருக்கு ஆதரவு கேட்டு கிராம மக்களை நேரடியாக சந்திக்க வந்துள்ளேன். உங்களிடம் நேரில் குறைகளை கேட்டறிகிறேன். கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுகவினரோ, அமைச்சர்களோ உங்களிடம் வந்து குறைகளை கேட்டுள்ளார்களா, நாங்கள் எதிர்க்கட்சியாக இருந் தாலும் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்கிறோம். குடிநீர், பேருந்து வசதிகள், முதியோருக்கு உதவி தொகை போன்ற சுலப மாக தீர்க்க வேண்டிய பிரச்சினை களைகூட ஆளுங்கட்சி தீர்க்க வில்லை. உள்ளாட்சித் தேர்தலை யும் நடத்தவில்லை. தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சிக்கு வரும். வந்ததும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவோம்.

தொழிற்சாலைகளை உருவாக் கினால்தான் வேலைவாய்ப்புகளை அளிக்க முடியும். அதையெல்லாம் ஆளுங்கட்சி செய்யவில்லை. முதல்வரும், அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணிகள்போல் ஊர்சுற்றி வந்துள் ளனர். முதலீடுகள் வந்துள்ளதாக பொய்யான தகவல்களை கூறி வருகிறார்கள் என்றார் ஸ்டாலின்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in