மத்திய அரசின் நிதியில் விவசாய நிலங்களில் சூரிய சக்தி மின்நிலையம்: தமிழக மின்சார வாரியம் புதிய திட்டம்

மத்திய அரசின் நிதியில் விவசாய நிலங்களில் சூரிய சக்தி மின்நிலையம்: தமிழக மின்சார வாரியம் புதிய திட்டம்
Updated on
1 min read

சென்னை

விவசாய நிலங்களில் சூரிய சக்தி மின்நிலையங்கள் அமைத்து, விவசாயப் பயன்பாட்டுக்கு சூரிய ஒளி மின்சாரம் வழங்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் 21 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு மின் வாரியம் சார்பில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான செலவை தமிழக அரசு மானியமாக மின் வாரியத்துக்கு வழங்குகிறது.

இந்நிலையில், விவசாய நிலங்களில் சூரியசக்தி மின்நிலை யங்கள் அமைத்து சூரிய ஒளி மின்சாரம் வழங்க முடிவு செய் யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

விவசாயிகளுக்கான நிதி யுதவி திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இலவச மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயி களின் நிலத்தில் சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு வருவாய்

இந்த மின்நிலையங்கள் மூலம் கிடைக்கும் சூரிய சக்தி மின்சாரம், மோட்டார் பம்ப்கள் இயக்க பயன்படுத்தப்படும்.

விவசாயிகள் உபரி மின் சாரத்தை மின்சார வாரியத்துக்கு விற்பனை செய்யலாம். இதன்மூலம், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

முதல்கட்டமாக, 5 மற்றும் 7.50 குதிரைத் திறன் கொண்ட 20 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளில் மத்திய அரசின் நிதியில், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையுடன் இணைந்து சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in