தேர்தல் விதிமுறை மீறல்; நாராயணசாமி மீது புகார் அளிக்க அதிமுக முடிவு 

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

புதுச்சேரி

தேர்தல் விதிமுறைகளை மீறி அரசு கட்டிடத்தில் முதல்வர் நாராயணசாமி இடைத்தேர்தல் தொடர்பாக அரசியல் பேசியது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாக புதுச்சேரி அதிமுக சட்டப்பேரவை கட்சி தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

காமராஜர் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் என் ஆர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி, சாமிபிள்ளை தோட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய ரங்கசாமி காமராஜர் மணி மண்டபத்தை கட்ட அடிக்கல் நாட்டினார்களோ அவரே அந்த கட்டிடத்தை திறந்து வைப்பார்கள் எனவும், ஆளுநர் கிரண்பேடியின் உத்தரவின் பேரிதால் தான் காமராஜர் மணி மண்டப பணி விரைந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும் அதனை தொடர்ந்து பேசிய என் ஆர் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் ‘‘தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் அரசு கட்டிடமான கம்பன் கலையரங்கத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் எதிர்க்கட்சி தலைவர் குறித்தும் இடைத்தேர்தல் குறித்து முதல்வர் நாராயணசாமி அரசியல் பேசியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம்’’ எனக் கூறினார்.

- செ.ஞானபிரகாஷ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in