

நாகர்கோவில்
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கு 500 மருத்துவர்கள், 2,853 செவிலியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.3.60 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இருதய நவீன சிகிச்சைக்கான கேத் லேப் சிகிச்சை வசதியை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார். தாய், சேய் நல கூடுதல் கட் டிடம் உட்பட ரூ.21 கோடி மதிப் பிலான திட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அமைச்சர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சென்னை, தரும புரி, விழுப்புரம் மாவட்டங் களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இதை கட்டுப்படுத்த தீவிர நட வடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. குமரியில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் தீவிர காய்ச்சல் பிரிவில் 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 6 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது. அவர் களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 27,777 மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் 500 மருத்துவர்கள், 508 பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு செவிலியர், 2,345 செவிலியர்கள் அரசு மருத்துவ மனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் பெறாத வகையில் தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் 380 மருத்துவ படிப்புக் கான இடங்கள், 508 மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான இடங் கள் கூடுதலாக பெறப் பட்டுள்ளன. மருத்துவத் துறை யில் குமரி மாவட்டம் சிறப்பான இடத்தை பெற்றிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதி நிதி தளவாய் சுந்தரம், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, எஸ்.பி. நாத், எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மருத்துவக் கல்லூரி டீன் பாலாஜிநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.