

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆராய்வதற்கு, ஜூன் 2-ல் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
"நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆராய்ந்திடவும்; எதிர்காலத்தில் கழகத்தின் வலிமையையும், வளர்ச்சியையும் மேலும் பெருக்குவதற்கேற்ப நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து முதல் கட்டமாக ஆலோசனை செய்து முடிவுகளை எடுக்கவும்; தி.மு.கழக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வரும் ஜூன் 2ஆம் நாள் காலை 10 மணி அளவில்,
அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில், கழகத் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும்.
மேலும், அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளையொட்டி அடுத்தடுத்து கழகத்தின் நிர்வாகக் குழு, செயற்குழு ஆகிய குழுக்களின் கூட்டத்திற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.