Published : 07 Oct 2019 10:17 AM
Last Updated : 07 Oct 2019 10:17 AM

சீனப் பிரதமருக்கு எதிர்ப்பு: திபெத் எழுத்தாளர் விழுப்புரத்தில் கைது

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப் பத்தில் கைது செய்யப்பட்ட திபெத் எழுத்தாளர் டென்ஜின் சுண்டு.

விழுப்புரம்

மாமல்லபுரம் வருகை தரும் சீனப் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்க இருந்த திபெத் எழுத்தாளரை விழுப்புரத்தில் போலீஸார் கைது செய்தனர்.

இந்தியா வரும் சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்க்குக்கு கருப்பு கொடி காட்ட டென்ஜின் சுண்டு (40) என்பவர் விழுப்புரம், புதுச்சேரி எல்லையில் பதுங்கி இருப்பதாக மத்திய உளவுத்துறை விழுப்புரம் மற்றும் புதுச்சேரி போலீஸாருக்கு ரகசிய தகவல் அனுப்பியது. இதை யடுத்து விழுப்புரம், புதுச்சேரி போலீஸார் கடந்த சில நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தமிழக எல்லை யான கோட்டக்குப்பத்தில் வாட கைக்கு வீடு கேட்டு சுற்றிக்கொண் டிருந்த டென்ஜின் சுண்டுவை விழுப் புரம் எஸ்.பி ஜெயக்குமார் தலைமை யில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் இரவு கோட்டக் குப்பம் அருகே தந்திரியான்குப்பத் தில் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 7/1A-ன் கீழ் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத் தனர். அவரிடமிருந்து 'சுதந்திர திபெத்: சீனா வெளியேறு' என்ற வாசகங்கள் அடங்கிய சிவப்பு பேனரை போலீஸார் பறிமு தல் செய்தனர். கைது செய்யப் பட்ட டென்ஜின் சுண்டு திபெத்திய எழுத்தாளரும், சமூக ஆர்வல ருமாக உள்ளார். இவர் 2002-ம் ஆண்டு மும்பை வந்த அப்போ தைய சீனப் பிரதமர் ஜி.ரோங்ஜிக்கு கருப்பு கொடி காட்டும்போது கைது செய்யப்பட்டார். இமாச்சல் பிரதேசம் தர்மசலாவில் தங்கி இருந்த இவர் மீண்டும் 2006-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

தற்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடனான தேனீர் விருந்தையும், அருணாசலபிர தேசத்தில் ராணுவ கூட்டுப் பயிற் சியில் கலந்து கொள்ள உள்ளதை கண்டித்தும், மாமல் லபுரம் வருகை புரியும் சீனப் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிப் பதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x