மோடி ஜனநாயகவாதியா? பாசிஸ்ட்டா? - முத்தரசன் கேள்வி

மோடி ஜனநாயகவாதியா? பாசிஸ்ட்டா? - முத்தரசன் கேள்வி
Updated on
1 min read

விழுப்புரம்

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட முண்டியம்பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர் தல் பணி தயாரிப்பு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு சிறப்புரையாற் றினார்.

முன்னதாக அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

நாடு பொருளாதார நெருக் கடியில் இருக்கும்போது மத்திய அரசு கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு தொடர்ந்து சலுகைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. தற் போதைய ஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தும் படிப்படியாக தனியார் மயமாக் கப்பட்டு வருகின்றன.

வங்கிகள் ஏற்கெனவே தனியாக இருந்து, மக்கள் நலன் கருதி அவை நாட்டுடமையாக்கப்பட்டன. 27 வங்கிகள் செயல்பட்டுக் கொண்டி ருந்த நிலையில் 12 வங்கிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தங்களின் அரசியல் எதிரிகளை பழி வாங்குவதற்கு வருமான வரித் துறை பயன்படுத்தப்பட்டு வருகி றது.

இன்றைக்கு மோடி ஆட்சியில் 'இம்மென்றால் சிறைவாசம் ஏனென் றால் வனவாசம்' என்கிற மிக மிக மோசமான ஒரு நிலை ஏற்பட்டிருக் கிறது. மோடி ஒரு ஜனநாயக வாதியா? அல்லது ஒரு பாசிஸ்ட்டா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இப்படிச் சொல்வதற்காக என் மீது தேசத்துரோக குற்றம் சுமத்தப் பட்டால் அதைப் பற்றி நான் கவலைப்பட தயாராக இல்லை.

மத்திய அரசு ரயில்வே துறை யையும், மாநில அரசு போக்கு வரத்து துறையையும் தனியார் மயமாக்க முயற்சிகள் எடுத்து வருகின்றன. தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மத்திய, மாநில அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக திமுக, காங்கிரஸ் வேட் பாளர்களுக்கு வாக்களிப்பார்கள்.

நாங்குநேரி தொகுதியில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப் பட்டுள்ளன. ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் ஆளுங்கட்சியின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப் படாமல் உள்ளன. திமுக எங்கள் கட்சிக்கு அளித்த பணம் வங்கி மூலம் ஒளிவு மறைவு இல்லாமல் அனுப்பியுள்ளது என்றார்.

இதற்கு முன்பு கூட்டணிக் கட்சிக ளுக்கு பணம் கொடுக்கப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேட்ட தற்கு, “அதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசிய மில்லை. நான் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை” என்று பதிலளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in