

சென்னை
தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து பொறியியல் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், கொசு உற்பத்தியைத் தடுக்கும் விதமாக கல்லூரி வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், அந்தந்த பகுதி சுகாதார அதிகாரிகளின் உதவியுடன் மாண வகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்க ஏற்பாடு செய்ய வேண் டும். அதனுடன், கல்லூரி வளாகம் முழுவதும் புகை மருந்து அடிப்பதற் கான பணிகளையும் செய்து முடிக்க வேண்டும். இவைதவிர, டெங்கு பாதிப்பு தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.