டெங்கு காய்ச்சல் விவரத்தை மறைத்து மர்ம காய்ச்சல் என தவறான பிரச்சாரம்: தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். உடன் சேகர்பாபு எம்எல்ஏ மற்றும் டாக்டர்கள்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். உடன் சேகர்பாபு எம்எல்ஏ மற்றும் டாக்டர்கள்.
Updated on
1 min read

சென்னை

சென்னை அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும்படி டாக்டர் களை அறிவுறுத்தினார்.

அப்போது மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த மருத்துவமனையில் மட்டும் டெங்குவால் பாதிக்கப்பட்ட 17 ஆண்களும் 14 பெண்களும் என மொத்தம் 31 பேர் அனுமதிக் கப்பட்டிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள வர்கள் எத்தனை பேர் என்கிற விபரத்தைக் கூட இந்த அரசு வெளிப்படையாகத் தராமல் மிகச் சர்வ சாதாரணமாக மர்மக் காய்ச்சல் வந்திருக்கிறது என்று ஒரு தவறான பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருக்கிறது.

பாதிக்கப்பட்டிருக்கும் நோயா ளிகளுக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளித்திட வேண்டும். காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதி களில் இருக்கக்கூடிய மக்கள், டெங்கு வராமல் தடுக்கும் நடவ டிக்கைகளை விழிப்புணர்வுடன் நிறைவேற்ற வேண்டும். சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் அண்மையில் இந்த நோயைப் பற்றிக் கேட் கிறபோது, "கொசுவுக்கு முன்னால், கொசுவுக்குப் பின்னால்" என்று ஒரு நகைச்சுவையைச் சொல்லி யிருக்கிறார்.

இக்காய்ச்சலினால் பாதிக்கப் பட்டு இருப்பவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் அமைச்சர் பேட்டி கொடுக்கிறார். இது மிகவும் வருத்தத்துக்குரியது. கண்டனத்துக்குரியது. மக்களைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ கவலைப்படாத ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக் கிறது.

எனவேதான், எதிர்க்கட்சித் தலை வர் என்ற முறையில், டெங்கு வால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை நேரடியாகப் பார்த்து, டாக்டர் களையும் சந்தித்து சிகிச்சையை வேகப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வைத்தேன். நீட் தேர்வு ஆள்மாறாட்டப் பிரச்சினையில் சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளியே வரும். பேனர் வைக்கவும் முதல்வர் மற்றும் பிரதமர் படத்தையும் கட்அவுட்டாக வைப்பதற்கும் நீதிமன்றம் சென்று, அனுமதி கேட்பவர்கள், ஏன் நீட் தேர்வுப் பிரச்சினையில் இந்த அரசு நீதிமன்றத்துக்குச் செல்ல வில்லை. பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக 49 பேர் மீது போடப்பட்டுள்ள வழக்கைத் திரும் பப் பெற வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in