

சென்னை
வேளச்சேரியில் மாநகர பேருந்தை ஓட்டிச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்த ஓட்டுநர் எம்.ராஜேஷ் கண்ணனின் உடலுக்கு போக்குவரத்து செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் கோ.கணேசன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மாநகர போக்குவரத்து கழகத்தின் கே.கே.நகர் பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த எம்.ராஜேஷ் கண்ணன் (வயது 31), நேற்று முன்தினம் சிறுசேரி முதல் கேளம்பாக்கம் வரையி லான வழித்தடத்தில் இயங்கக் கூடிய (வழித்தட எண். 570-எஸ்) பேருந்தை இயக்கிக் கொண்டிருந் தார். அப்போது எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் உடல் உடனடியாக 108 அவசர ஊர்தியில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, போக்குவரத்து துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கோ.கணேசன் ஆகியோர் உடல் கூறாய்வு செய்யப் பட்ட ராஜேஷ் கண்ணனின் உடலுக்கு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அருகில் இருந்த அவர்களின் குடும்பத்தி னருக்கு ஆறுதுல் கூறினர். இதேபோல், போக்குவரத்து கழக அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் உள்ளிட் டோரும் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வின்போது, ராயப் பேட்டை அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் மணி உடனிருந் தார்.
உயிரிழந்த ராஜேஷ் கண்ணன், தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், அவருடைய உடலை சொந்த ஊருக்கு அரசின் சார்பில் இலவசமாக எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், இறுதி சடங்குகள் மேற்கொள்ளும் பொருட்டு உடனடி நிவாரண உதவியும் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டது. எம்.ராஜேஷ் கண்ணன் பணி யாற்றிய நாட்கள் உள்ளிட்ட விபரங் கள் சேகரிக்கப்பட்டு, அவருக்கான பணப்பலன் உள்ளிட்டவை உடனுக்குடன் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.