

சென்னை
சென்னை விமான நிலையத்தில் ரூ.24.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசியாவில் இருந்து விமானம் நேற்று சென்னை வந்தது. சுங்கத் துறை அதிகாரிகள் பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது வந்த சென்னையைச் சேர்ந்த யாசர் (29) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை சோதனை செய்ததில், அவர் 9.25 லட்சம் மதிப்புள்ள 235 கிராம் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரிடம் இருந்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், கோலாலம்பூரில் இருந்து வந்த கமலா (52) என்பவரிடம் இருந்து ரூ.15.2 லட்சம் மதிப்புள்ள 385 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.