

பெ. ஜேம்ஸ்குமார்
ஸ்ரீபெரும்புதூர்
காஞ்சி மாவட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கிராமப் புற நூலகங்கள் பராமரிப்பு இல்லாமல் முடங்கியுள்ளன. சில நூலகங்கள் மூடப் படுவதால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த, 2006 ம் ஆண்டு, அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின்கீழ் பல கிராமங்களில் நூலகங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப் பட்டு வந்தன. இந்த நூலகங்களால் கிராமப் புற மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் என பல்வேறு தரப்பினரும் பயனடைந்து வந் தனர். போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங் கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளதால், கிராமப்பகுதி இளைஞர்கள் பயனடையும் வகையில் இது அமைந்தது. படித்த, மூத்த வயது கொண்ட ஒருவரை ரூ.1,500 மாதச் சம்பளத்துக்கு நியமித்து நூலகங்கள் பாரமரிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், சமீப காலமாக நூலகங் கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப் படுவதில்லை. உரிய பராமரிப்பு இல்லா ததால் பெரும்பாலான கிராமப்புற நூலகங் கள் மூடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் இயங்கும் நூலகங்கள் உரிய பராமரிப்பின்றி திறக்கப்படாமல் புத்தகங்கள் மட்கி வருகின்றன. சில இடங்களில் சமூக விரோத கும்பல்களின் கூடாரமாகவும் நூலகங்கள் மாறியுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 633 ஊராட்சி களிலும் நூலகங்கள் தொடங்கப்பட்டு, தற் போது அதில், 50 சதவீதம் மட்டுமே அறை குறையாக இயங்கி வருகின்றன. கிராம மக்களிடையே புத்தக வாசிப்பை ஊக்கப் படுத்தவும், போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்துகொள்ளவும் உருவாக்கப்பட்ட நூல கங்கள் பராமரிப்பின்றி கிடப்பதால் யாருக் கும் பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக இளைஞர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
12,660 நூலகங்கள்
இதுகுறித்து சமூக ஆர்வலர் தாமோதரன் கூறியதாவது:
கடந்த, 2006-ம் ஆண்டில் அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள 12,660 கிராம ஊராட்சிகளில் தலா ரூ.3.25 லட்சம் செலவில் நூலக கட்டிடங்கள் கட்டப்பட்டன. பல லட்ச ரூபாய் செலவில் 40-க்கும் மேற்பட்ட பதிப்பகங்களைச் சேர்ந்த புத்தகங்கள் வாங்கப்பட்டன. காலப்போக் கில் நூலகங்கள் உரிய பராமரிப்பின்றி, எந்நேரமும் பூட்டியே கிடந்தன.
இதனால், கிராமப்புற மாணவர்கள், கல்வியாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பு கின்றனர். மேலும், பல கோடி ரூபாய் செலவில் வாங்கிய விலை மதிப்பற்ற புத்த கங்கள் பயன்பாடின்றி வீணாகியுள்ளன. நூலக பராமரிப்பாளர்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்பட்டது. பல ஊராட்சிகளில் முறையாக வழங்காததால் யாரும் பராமரிப்பு செய்ய முன்வரவில்லை. ஆனால், மாதா மாதம் அந்த தொகை வழங்கப்படுவதாக ஊராட்சிகளில் கணக்கு காட்டப்படுகிறது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இது அதிகமாக நடைபெறுகிறது.
கிராமப்புற மாணவர்கள் அறிவை வளர்க்க ஏதுவாக கிராமங்களில் செயல்படும் ஊரக, கிளை நூலகங்களுடன், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களை இணைத்து, கிராமப்புற நூலகங்களை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெயரளவுக்கு மட்டும் செயல்படும் கிராமப் புற நூலகங்கள் முழுமையான அளவில் செயல்பட்டால் அங்குள்ள மக்கள் பயனடை வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நூலகத் துறையை சேர்ந்த அலுவலர் ஒருவர் கூறியதாவது:
கிராம ஊராட்சிகள் சார்பில் நடத்த முடியாத நூலகங்களை எங்களிடம் ஒப்படைத்தால் நாங்கள் நடத்திக் கொள் கிறோம் என ஊராட்சி ஒன்றிய நிர்வாகங் களுக்கு ஏற்கெனவே சுற்றறிக்கை அனுப்பி யுள்ளோம். சில பகுதியில் எங்களிடம் ஒப் படைத்துள்ளனர். அவற்றை நாங்கள் பரா மரித்து வருகிறோம். பல கிராமங்களில் ஒப்படைக்கவில்லை, அவர்களும் சரிவர பராமரிப்பதில்லை. ஊராட்சி நிர்வாகம் செய்யும் தவறால், நூலகத் துறை மீது குற்றச்சாட்டு எழுகிறது. இவ்வாறு