கற்பித்தல் பணிகளை மேம்படுத்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி: அக்டோபர் 14-ம் தேதி தொடங்கும் என கல்வித் துறை தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை

கற்பித்தல் பணிகளை மேம் படுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் களுக்கு 5 நாட்கள் பணியிடை பயிற்சி வழங்கி அதன் முடிவில் சிறப்பு தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கை:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்த மாதம் 100 தலைமை ஆசிரியர்கள் உட்பட 600 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 5 நாள் மாவட்டம் மற்றும் வட்டார அளவில் ‘நிஷ்தா’ பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன்படி அக்.14 முதல் 20-ம் தேதி வரை 5 பிரிவுகளாக பயிற்சி நடத்தப்பட வேண்டும்.

இதற்காக தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) உருவாக் கியுள்ள கையேடுகள் கல்வித் துறையால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆசிரியர்களுக்கு தரப்படும்.

செல்போன் செயலி

நிஷ்தா பயிற்சிக்கென nishtha.ncert.gov.in என்ற வலைப் பக்கமும், செல்போன் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதி்ல் இடம்பெற்றுள்ள பாடத்திட்டங்களை பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

எனவே, அனைவரும் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும். மேலும், பயிற்சி முடிவில் ஆசிரி யர்களுக்கு தேர்வு நடத்தப்படும்.இந்த பயிற்சி மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சகத் தால் நேரிடையாக கண்காணிக் கப்படும்.எனவே, புகார்களுக்கு இடம் அளிக்காத வண்ணம் பயிற்சி களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in