

தாம்பரம்
தாம்பரம் நகராட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட 23 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட் டன. இதுவரை ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் டம்ளர்கள், பேப்பர் கப், ஸ்ட்ரா, பிளாஸ்டிக் இலை, தெர்மாகோல் கப், பிளாஸ் டிக் பூச்சு பூசப்பட்ட மேஜை விரிப்புகள் உள்ளிட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட் களுக்கு, கடந்த ஜனவரி மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதித்து பல மாதங்கள் ஆன நிலையிலும், தாம்பரம் நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை மற்றும் பயன்பாடு வழக்கமாக இருந்தது. தாம்பரம் நகராட்சியில், இதுவரை பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை, 21 டன் வரை பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் பண்டிகை காலம் என்பதால் பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக ஏராளமான புகர்கள் வந்தன. இதையடுத்து, தாம்பரம் நகராட்சியில் தனியார் துணிக்கடைகள், ஓட்டல்கள், ஜவுளி மற்றும் பலகாரக் கடை களில் நகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற் கொண்டனர்.
அப்போது, துணிக்கடை மற்றும் பேக்கரிகளில் ஆய்வு செய்ததில் ஒரு முறையே பயன் படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியது தெரி யவந்தது. அப்பகுதிகளில் சோதனையிட்டபோதும் 2.1 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த கடைகளுக்கு ரூ.23,500 வரையில் அபராதம் வசூலிக்கப் பட்டது. இந்த ஆய்வின்போது நகராட்சி சுகாதார அலுவலர் மொய்தீன், ஆய்வாளர்கள் ஆல்பர்ட், சிவகுமார், காளிதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது முதல் இதுவரை தாம்பரம் நகராட்சியில் 23 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.