ஆண்டுதோறும் 4,000 பேர் ஓய்வு; புதிய நியமனம் இல்லை; அரசு போக்குவரத்து கழகங்களில் 30 சதவீதம் ஆட்கள் பற்றாக்குறை: கூடுதல் பணிச் சுமையால் அவதிப்படும் ஊழியர்கள்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

கி.ஜெயப்பிரகாஷ்

சென்னை

அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர்கள் உட்பட ஆண்டு தோறும் 4,000 பேர் ஓய்வு பெறுகின்றனர். இதை ஈடுகட்ட புதிய நியமனங்கள் செய்யப்படாததால், கூடுதல் பணிச் சுமையால் மனஉளைச்சல் ஏற்பட்டு ஊழியர்கள் அவதிப்படு கின்றனர்.

தமிழகத்தில் நகரமயமாக்கலின் வேகம் அதிகரித்துவரும் நிலையில், போக்குவரத்து தேவையும் அதி கரித்து வருகிறது. மக்களின் போக்கு வரத்து தேவையை பூர்த்தி செய் வதில் அரசு போக்குவரத்து கழகங் களின் பங்கு முக்கியமானது. 8 அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் தினமும் இயக்கப்படும் 19,489 பேருந்துகளில் 1 கோடியே 74 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். பண்டிகை நாட்களில் மட்டுமல்லாமல், தொடர் விடுமுறை நாட்களிலும் மக்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகங் களில் இருந்து பழைய பேருந்துகள் படிப்படியாக நீக்கப்பட்டு புதிய பேருந்துகள் இணைக்கப்பட்டு வரு கின்றன. கடந்த 2011 முதல் இது வரை 13,253 புதிய பேருந்துகள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளாக புதிய பேருந்து களின் வருகை அதிகம் இருக்கிறது. ஆனால், தற்போது அரசு போக்கு வரத்து கழங்களில் ஆட்கள் பற்றாக் குறை பிரச்சினை தொடங்கிவிட்டது.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் 1.43 லட்சம் பேர் பணி யாற்றுகின்றனர். கடந்த 1985-ம் ஆண்டு வாக்கில் போக்குவரத்து கழகங்களில் பணிக்கு சேர்ந்தவர்கள் 2018, 2019-ம் ஆண்டுகளில் அதிக அளவில் ஓய்வு பெறுகின்றனர். ஓட்டுநர்கள், நடத்துநர் கள் 2,500 பேர் உட்பட சுமார் 4,000 பேர் ஆண்டுதோறும் ஓய்வு பெறு கிறார்கள். கடந்த 4 ஆண்டுகளாக புதிய ஆட்களும் நியமிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

இதற்கிடையே, சென்னை வேளச் சேரியில் மாநகர பேருந்தை ஓட்டிச் சென்றபோது ராஜேஷ் கண்ணா (31) என்பவர் திடீர் நெஞ்சுவலியால் நிலை குலைந்து நேற்று முன்தினம் உயி ரிழந்தார். இந்த சம்பவம் போக்கு வரத்து ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, போதிய ஆட்களை நிய மித்து கூடுதல் பணிச்சுமையை தடுக்க வேண்டுமென ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக சிஐடியு மூத்த நிர்வாகி சந்திரன் கூறும்போது, “அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதால், தற்போதுள்ள ஊழியர்களே போதும் என நிர்வாகம் கூறுகிறது. ஆண்டுதோறும் 4 ஆயி ரம் முதல் 4,500 பேர் ஓய்வு பெறு கின்றனர். ஆனால், கடந்த 4 ஆண்டு களாக புதிய ஆட்கள் நியமனம் செய்யவில்லை.

ஆனால், ஓட்டுநர்கள், நடத்துநர் கள் பற்றாக்குறையால் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஓய்வின்றி பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு இருக்கும் விடுப்புகளை கூட எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கூடு தல் நேரம் பணியாற்றுவதால், மன உளைச்சலால் ஊழியர்கள் அவதிப் படுகின்றனர். தீபாவளிபண்டிகை நெருங்கவுள்ளதால், மக்களுக்கு போதிய அளவில் பேருந்து சேவை கிடைக்கும் வகையில் போக்குவரத்து துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றார்.

தற்காலிக ஊழியர்கள்

இதுதொடர்பாக அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு போதிய அளவில் புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், பேருந்து கட்டண உயர்வின் போது குறைந்த பயணிகள் எண்ணிக்கை தற்போது சற்று அதிகரிக்க தொடங்கி யுள்ளது. ஆனால், போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர்கள், நடத்துநர் கள் பிரிவில் 20 முதல் 30 சதவீதம் வரையில் பற்றாக்குறை இருக்கிறது.

இது தொடர்பான அறிக்கையை தமிழக அரசிடமும் அளித்துள்ளோம். எனவே, மாற்று ஏற்பாடுகளை செய்யவும், புதிய ஆட்கள் அல்லது உடனடி தேவைக்கு தற்காலிக ஊழியர் களை தேர்வு செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in