

ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக தேர்தல் துறையின் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வாக்கு எண்ணிக்கையை கண்காணித்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதி யாக நடந்து முடிந் துள்ளது.
தேர்தல் நடவடிக் கைகளை மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்ப தற்காகவே ‘இ-நேத்ரா’ போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
சில கட்சிகள் பல விதமான புகார்களை தெரிவித்தன. அந்த கட்சியினர் அரசி யல் ரீதியான குற்றச் சாட்டுகளை கூறும் போது அதற்கான ஆதாரங்களையும் அளிக்க வேண் டும். தேர்தல் ஆணை யத்துக்கு வந்த புகார் களுக்கு பதில் அளித் துள்ளோம். அதை இணையதளத்தில் பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.