Published : 06 Oct 2019 12:40 PM
Last Updated : 06 Oct 2019 12:40 PM

ஹோட்டல் சமையல் எண்ணெய் மறுபயன்பாட்டுக்கு வராமல் தடுக்க கழிவு எண்ணெய்யில் இருந்து பயோ டீசல் தயாரிப்பு : உணவு பாதுகாப்பு துறை முடிவு

எண்ணெய்யில் பொரிக்கப்படும் பஜ்ஜி.

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை

ஹோட்டல்களில் தினமும் மீதமாகும் கழிவு சமையல் எண்ணெய் மீண்டும் சாலை யோர கடைகளுக்கு மறு பயன் பாட்டுக்கு வருவதைத் தடுக்க, குஜராத்தைப்போல், தமிழகத் திலும் கழிவு எண்ணெய்களை சேகரித்து அதில் இருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டத்தை தொடங்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சமையல் எண்ணெய்களை ஒன்று அல்லது இருமுறை உண வுப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தலாம். அதன் பிறகு பயன்படுத்தினால் அதில் தயாரிக்கப்படும் உணவுகளை சாப் பிடுவோர் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மதுரையில் தினமும் 4 லட்சம் லிட்டர் சமையல் எண்ணெய் விற்பனையாகிறது. இந்த எண்ணெய், தென் மாவட்டங் களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

ஒரு ஹோட்டலில் 50 லிட்டர் சமையல் எண்ணெய் பயன்படுத் தினால் அதில் 10 லிட்டர் கழிவு எண்ணெய் உருவாக வாய்ப்புள்ளது. இந்த கழிவு எண்ணெய்யை, ஹோட்டல் நிறுவனத்தினர் லிட்டர் ரூ.20-க்கு மறு பயன்பாட்டுக்கு விற்கின்றனர். அதை வாங்கும் சாலையோர வியாபாரிகள், அதை மீண்டும் உணவுப் பொருட்கள் தயாரிக்கவும், பொரிக்கவும் பயன் படுத்துகின்றனர். இந்த உணவுப் பொருட்கள் வாங்கி சாப்பிடுவோர் உடல் நலன் பாதிக்கப்படுகிறது.

இதைத் தடுக்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிறுவனம் தமிழகத்தில் அதிக அளவு சமையல் எண்ணெய்களை பயன்படுத்தம் ஹோட்டல்கள், பேக்கரிகள் ஆகியவற்றிடம் இருந்து மீதமாகும் கழிவு சமையல் எண்ணெய்யை சேகரித்து அதில் இருந்து பயோ டீசல் தயாரிக்க உள்ளது. இந்தியாவில் தற்போது குஜ ராத் மாநிலத்தில் மட்டும் இந்த திட்டம் பரிசோதனை முறையில் செயல்படுத்தப்படுகிறது. அதே போல், தமிழகத்திலும் கழிவு சமையல் எண்ணெய் மறு பயன் பாட்டுக்கு வருவதைத் தடுக்க அதில் இருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டத்தை தொடங்க உள்ளது.

மாவட்ட உணவுப் பாது காப்பு நியமன அலுவலர் சோமசுந்தரம் கூறியதாவது:

பெரிய நிறுவனங்களில் பயன் படுத்திவிட்டு மீதமாகும் கழிவு எண்ணெய் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிறுவனம் அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்படும் சாலையோர ஹோட்டல்கள், தள்ளுவண்டி கடைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதை தடுக்கவே இந்த பயோ டீசல் தயா ரிப்பு திட்டம் தொடங்கப்படுகிறது.

மதுரையில் பரிசோதனை முறையில் வரும் 10-ம் தேதி தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக தமிழகம் முழுவதும் உணவு, மிக்சர், பேக்கரி தயாரிப்பு நிறுவனங்கள், ஹோட்டல்கள் பட்டியலை கேட்டுள்ளோம். அவர்களிடம் தினமும் எவ்வளவு கழிவு சமையல் எண்ணெய் மீதமாகிறது என்ற விவரங்களையும் கேட்டு வருகிறோம்.

மதுரையில் முதற்கட்டமாக 10 நிறுவனங்களில் மீதமாகும் கழிவு எண்ணெய்யை சேகரித்து அதில் இருந்து பயோ டீசல் தயாரிக்க முடிவு செய்துள்ளேம். இந்த திட்டத்தில் சேர்க்கப்படும் நிறுவனங்களில் ரூவோ ஸ்டிக்கர் ஒட்டப்படும். இந்த ஸ்டிக்கர் ஓட்டப் படும் நிறுவனங்களில் இருந்து கழிவு சமையல் எண் ணெய்யை சேகரித்து, அதில் இருந்து பயோ டீசல் தயாரிக்க முடிவு செய்துள்ளோம். டீசல், பெட்ரோலுக்கு மாற்றாக கழிவு எண்ணெய்யில் இருந்து தயாரிக்கப்படும் பயோ டீசலைப் பயன்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x