Published : 06 Oct 2019 12:09 PM
Last Updated : 06 Oct 2019 12:09 PM

பிரதமர் - சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை: புதுப் பொலிவு பெறும் மாமல்லபுரம் - வணிகர்கள், விடுதி நிர்வாகிகளுடன் காவல்துறை ஆலோசனை

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்ல புரத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வருகைதர உள்ளதையொட்டி, பல்வேறு இடங்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு மாமல்லபுரம் ஒளிமயமாகக் காட்சி அளிக்க தொடங்கியுள் ளது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும் விதமாக காவல் துறையினர் வணிகர்கள், விடுதி நிர்வாகி களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இந்திய பிரத மர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெற உள்ளது. அப்போது இவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள கலைச் சின்னங்களைப் பார்வையிடு வதுடன் கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்க இருப்பதாகவும் தெரிகிறது.

இவர்கள் வருகையை யொட்டி மாமல்லபுரம் கடற் கரை கோயிலைச் சுற்றி மின் விளக்குகள் பொருத்தப்பட்டு மாமல்லபுரம் முழுவதும் ஒளி மயமாகக் காட்சி அளிக்கிறது. மேலும் பஞ்சபாண்டவர் ரதம் பகுதியில் இவர்கள் நடந்து செல்வதற்காக பலகைகளால் ஆன நடைபாதை அமைக்கப் படுகிறது. அர்ஜூனன் தபசு பகுதியில் மரத் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. பய ணத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்கப் பணிகளும் நடைபெறுகின்றன.

இவர்கள் வருகையை யொட்டி பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து நேற்று, காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தலை மையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் துறையுடன் வணிகர் கள், விடுதி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், தலைவர்கள் வரு கையின்போது கடைகளை மூட வேண்டியது இல்லை. சாலைப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் வணி கத்தை நடத்தலாம். விடுதி உரி மையாளர்கள் தங்கள் விடுதி யில் தங்குபவர்களின் அடை யாளச் சான்றுகளைப் பெற வேண்டும். சந்தேகத்துக்கு இட மான வகையில் யாராவது தங்கி இருந்தால் தகவல் தெரி விக்க வேண்டும். இரவு நேரத் தில் சந்தேகத்துக்குரிய வகை யில் எவரேனும் நடமாடி னால் தகவல் தெரிவிக்க வேண் டும் என கூட்டத்தில் பங்கேற்ற வர்களிடம் காவல் துறையினர் கோரிக்கை விடுத்தனர்.

தலைவர்கள் வரும் இடங் களில் செய்யப்பட்டுள்ள ஏற் பாடுகள் குறித்து முன்னாள் மத் திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் நேற்று முன்தினம் மாலை ஆய்வு செய்தார். அவர் கடற்கரை கோயில், அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்த னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x