Published : 06 Oct 2019 10:55 AM
Last Updated : 06 Oct 2019 10:55 AM

திருச்சி நகை கொள்ளை வழக்கில் தேடப்பட்ட சுரேஷ் சிக்கினார்? - முருகனின் சகோதரி கனகவல்லி, மணிகண்டன் சிறையில் அடைப்பு

திருச்சியில் லலிதா ஜூவல்லரியில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பிரபல கொள்ளையன் முருகனின் சகோதரி கனகவல்லி, மணிகண்டன் ஆகியோர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முக்கிய குற்ற வாளிகளில் ஒருவராக கருதப்படும் சுரேஷ், தனிப்படை போலீஸாரிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலை யம் அருகேயுள்ள லலிதா ஜூவல்ல ரியில் கடந்த அக்.2-ம் தேதி அதி காலை ரூ.13 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டன. இதில் ஈடுபட்டவர் களை கைது செய்வதற்காக 7 தனிப்படைகளை அமைத்து திருச்சி மாநகர போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக திருச்சி மட்டுமின்றி மத்திய மண்டலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.

அதனடிப்படையில் கடந்த 3-ம் தேதி இரவு திருவாரூரில் நடத் தப்பட்ட வாகன சோதனையின் போது, திருவாரூர் மடப்புரம் தென் கரையிலுள்ள முக்தி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த இளங் கோவன் மகன் மணிகண்டன்(34) என்பவர் சிக்கினார். அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த திருவாரூர் சீராத்தோப்பு பேபி டாக்கீஸ் பகுதியைச் சேர்ந்த பன்னீர் செல்வம் மகன் சுரேஷ்(28) என்ப வர் தன் கையில் வைத்திருந்த பெட்டியை கீழே போட்டுவிட்டு தப்பி யோடினார். போலீஸார் அந்த பெட்டி யைக் கைப்பற்றி ஆய்வுசெய்த போது, அதில் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இருந்தன.

இதையடுத்து மணிகண்டனை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல கொள்ளையனும், சுரேஷின் தாய்மாமனுமான முருகன்(45) என்ப வரின் தலைமையில்தான் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக் கப்பட்டது என்பது தெரிய வந்தது.

மேலும், இக்கொள்ளை வழக் கில் சுரேஷின் தாயும், முருகனின் சகோதரியுமான கனகவல்லி உள் ளிட்ட மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அதன்பேரில் கனகவல்லி(57), சுரேஷின் நண்பர்கள் குணா, ரவி, மாரியப்பன் உட்பட 10-க்கும் மேற் பட்டவர்களைப் பிடித்து திருவாரூ ரில் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.

அவர்களில் மணிகண்டன், கனக வல்லி ஆகிய இருவரையும் நேற்று பலத்த பாதுகாப்புடன் வேன் மூலம் திருச்சிக்கு அழைத்து வந்து கே.கே.நகரிலுள்ள ஆயுதப்படை வளாக திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து கொள்ளை அடிப்பதற்கான கூட்டுச் சதி செய் தது, குற்றத்துக்கு உடந்தையாக இருப்பது, கொள்ளையடித்த பொருட்களை மறைத்து வைத்தது உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளின் கீழ் மணிகண்டன், கனகவல்லி ஆகிய இருவரையும் கோட்டை குற்றப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். மணிகண்டனிடமிருந்து 4.250 கிலோ தங்க நகைகள், கனக வல்லிடம் இருந்து 450 கிராம் எடை யுள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையே, நேற்று நீதிமன்ற விடுமுறை நாள் என்பதால், மணி கண்டன், கனகவல்லி ஆகிய இரு வரையும் மன்னார்புரத்தில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் ஜே.எம்- 2 நீதிபதி திரிவேணி வீட்டில் ஆஜர் படுத்தினர். அவர்கள் இருவரையும் வரும் 18-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி திரிவேணி உத்தரவிட்டார். இதையடுத்து, மணி கண்டன் திருச்சி மத்திய சிறையி லும், கனகவல்லி திருச்சி மகளிர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே, இக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய சுரேஷ் நேற்று தனிப்படை போலீஸாரிடம் சிக்கியுள்ளதாகவும், ரகசிய இடத் தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் கள் வெளியாகியுள்ளன. ஆனால், போலீஸார் இதனை மறுத்து விட்டனர். முருகன் மற்றும் சுரேஷை தொடர்ந்து தேடிவருவதாக அவர் கள் தெரிவித்தனர்.

மதுரை நபருக்கு தொடர்பு

இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது: இந்த வழக்கில் தொடர்ச்சி யாக நடத்தப்பட்ட விசாரணையில், நகைக்கடை கொள்ளையில் மணி கண்டனுக்கும் நேரடி தொடர்பு இருப் பது கண்டறியப்பட்டது. கொள்ளை நடைபெற்றபோது நகைக்கடைக்கு வெளியே யாரும் வருகிறார்களா என கண்காணித்துள்ளார். இவர் அளித்த சில தகவல்கள், இவ் வழக்கில் தொடர்புடைய மற்ற நபர் களை அடையாளம் காண உதவி யது. அதனடிப்படையில் கொள் ளைக்கு உடந்தையாக இருந்த கனகவல்லியும் கைது செய்யப் பட்டார். முருகன், சுரேஷ் தவிர மதுரையைச் சேர்ந்த ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இவர்களைத் தேடி வருகிறோம் என்றார்.

“காவலில் எடுக்க வேண்டியதில்லை”

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறும்போது, “மணி கண்டனிடமும், கனகவல்லியிடமும் தேவையான அளவுக்கு விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. மணிகண்டன் இவ்வழக்கின் முக்கியமான துருப்புச்சீட்டாகி, அடுத்த கட்ட விசாரணைக்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார். இனி அவரிடம் விசாரிப்பதால் புதிதாக எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை. எனவே, இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது எனக் கருதுகிறோம்” என்றனர். வழக்கின் முக்கிய நபரான சுரேஷ், போலீஸின் பிடியில் சிக்கிவிட்டதாகவும், இனி அவர் மூலம் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்ள உள்ளதால்தான் இப்படியொரு முடிவை எடுத்திருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x