

ஹஜ் பயணம் மேற்கொள்வதில் காஷ்மீர் மக்களுக்கு எந்த இடையூறும் இருக்காது என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளை ஒருங்கிணைத்து கடனுதவி வழங்கும் திட்ட முகாம் சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கலந்துகொண்டு சிறு தொழில் முனைவோர் உட்பட பலருக்கு கடன் தொகைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது, ‘‘மக் கள் நலன் சார்ந்து பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வங்கிகள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தி மக்களுக்கு கடனுதவி தரப்படுகிறது. இதன் மூலம் ஆர்வமுள்ள இளைஞர் கள் சுயதொழில்களை உருவாக் கிக் கொள்ளலாம். உலக பொரு ளாதாரம் வீழ்ச்சி அடைந்தாலும் இந்திய பொருளாதாரம் சரியான முறையில் பாதுகாப்பாக உள்ளது’’என்றார்.
தொடர்ந்து மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘காஷ்மீர் மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள எந்த இடையூறும் இருக்காது. அதனால் மக்கள் கவலைப்படத் தேவையில்லை. மேலும், நவம்பரில் நடைபெற வுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது சிறுபான்மை மக்களுக்கு மேலும் பாதுகாப்பு தரும் சட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
பாஜகவின் 3 அம்சங்கள்
பாஜக ஆட்சியில் அனைத்து சமூகத்தினருக்கும் பாதுகாப்பு அளிப்பதே முதன்மையாக இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக சிலர் செய்யும் தவறான செயல் களால் ஏற்படும் விளைவுகளை தவிர்க்கவே அவர்கள் மீது சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திட்டமிடல், செயல்படுத்துதல், மாற்றம் ஆகிய 3 அம்சங்களை கொண்டு மத்திய அரசு இயங்கி வருகிறது’’ என்றார்.