‘பாரிவாஹன்’ இணையதளத்தில் கோளாறு: ஆர்டிஓ அலுவலக சேவை பெறுவதில் சிக்கல் - அதிகாரிகளுடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதம் 

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

‘பாரிவாஹன்’ இணையதளத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதால் ஓட்டுநர் உரிமம், வாகனங்கள் பதிவு உள்ளிட்டவற் றுக்கான கட்டணத்தை ஆன்லை னில் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் மக்களும் அடிக்கடி வாக்குவாதம் நடக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 70 வட் டாரப் போக்குவரத்து அலுவல கங்கள் (ஆர்டிஓ), 60-க்கும் மேற் பட்ட பகுதி அலுவலகங்கள் உள் ளன. ஓட்டுநர் உரிமம் வழங்கு தல், வாகனங்களுக்கு பதிவு எண் வழங்குதல், வாகன உரிமையா ளர்களின் பெயர் மாற்றம், உரிமம் புதுப்பித்தல், வரி வசூல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இங்கு நடக் கின்றன. இந்த சேவைகளைப் பெற https://parivahan.gov.in/parivahan/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை கடந்த ஆண்டு அக்.1-ம் தேதி தொடங்கப்பட்டது.

இதற்கான கட்டணத்தை ஆன் லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும். ஆனால் தற்போது தொடர்ந்து சர்வர் பிரச்சினை ஏற்படுவதால், பொதுமக்கள் இந்த சேவையைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டி கள் சிலர் கூறும்போது, ‘‘ஆன்லை னில் சர்வர் பிரச்சினை காரணமாக கட்டணம் கட்டவோ அல்லது அதற் கான ரசீதைப் பெறவோ முடிய வில்லை. இதனால், கடும் அவதி யாக இருக்கிறது. இதுதொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் எந்தப் பலனும் இல்லை’’ என்றனர்.

இதுதொடர்பாக வட்டார போக் குவரத்து அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, வரி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பலரும் ஒரே நேரத்தில் மேற்கொள்வதால் சர்வ ரில் பிரச்சினை ஏற்படுகிறது.

இதுகுறித்து போக்குவரத்து துறையின் உயர்மட்ட அதிகாரி களிடம் எடுத்து கூறிவிட்டோம். சர்வரின் தரத்தை உயர்த்தும் வரை யில் பழைய முறையே நீடிக்கவும் அனுமதி கேட்டோம். ஆனால், இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வரவில்லை. ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை எளி மைப்படுத்துமாறு பலரும் வேண்டு கோள் வைக்கின்றனர். மேலும், இணையதளத்தில் ஏற்படும் கோளாறுக்காக பொதுமக்கள் எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in