Published : 06 Oct 2019 09:52 AM
Last Updated : 06 Oct 2019 09:52 AM

ஏடிஎம்மில் நூதனமாக பணம் திருட்டு: ஹரியாணா இளைஞர்கள் 2 பேர் சென்னையில் கைது

சென்னை அமைந்தகரையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது.

இதில் இருந்து பணம் எடுத்த தற்கான பரிவர்த்தனைகள் எதுவும் காண்பிக்கப்படாத நிலையில், ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டி ருந்த பணம் மட்டும் குறைந்து வந்துள்ளது. தொடர்ந்து இதே போல் 2 நாட்கள் நடந்துள்ளது. இதனால், குழப்பம் அடைந்த வங்கி அதிகாரிகள் இதுகுறித்து அமைந்த கரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சம்பந்தப் பட்ட இடத்துக்குச் சென்ற போலீ ஸார் ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கடந்த 2-ம் தேதி இரவு இந்த ஏடிஎம் மையத்துக்கு வந்த 2 இளைஞர் களில் ஒருவர் வழக்கம்போல் இயந்திரத்தினுள் ஏடிஎம் கார்டை செலுத்துகிறார். பின்னர் நூதன முறையில் இயந்திரத்தை நிறுத்து கின்றனர். இதன்மூலம், இவர்களின் கைக்கு பணம் வந்துவிடும். ஆனால், எடுத்த பணம் குறித்த விவரம் சம்பந்தப்பட்ட வங்கியைச் சென்ற டையாது. இதனால், இவர்களின் கணக்கில் இருந்து பணம் எடுத்தது தெரியவராது. அதேசமயம், இவர் களின் கைக்கு பணம் கிடைத்து விடும்.

இத்தகைய நூதன திருட்டில் ஈடுபட நேற்று முன்தினம் இரவு மீண்டும் அமைந்தகரை வந்த அவர் களை அங்கு மறைந்திருந்த போலீ ஸார் கைது செய்தனர். அவர்கள் ஹரியாணாவைச் சேர்ந்த ஜாகீர் (20), ஹப்சல் (20) என தெரியவந் தது. அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x