கோயம்பேட்டில் ஆயுத பூஜை சிறப்பு சந்தை: பூ, பழங்கள் விற்பனை அமோகம் - தொழில் நிறுவனத்தினர், வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் கதம்பம், சாமந்தி சரம் கட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ள பெண்கள்.
ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் கதம்பம், சாமந்தி சரம் கட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ள பெண்கள்.
Updated on
1 min read

ஆயுதபூஜையை முன்னிட்டு கோயம்பேடு மலர் சந்தை வளாகத் தில் திறக்கப்பட்டுள்ள சிறப்பு சந்தையில் பூ, பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை விறு விறுப்பாக நடந்து வருகிறது.

கோயம்பேடு மலர் சந்தை வளாகத்தில் ஆயுதபூஜை சிறப் புச் சந்தை கடந்த 2-ம் தேதி திறக்கப்பட்டது. இதில் ஆயுத பூஜைக்குத் தேவையான பொருட் கள் தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த சிறப்புச் சந்தையில் தேங் காய் ரூ.20 முதல் ரூ.30 வரை, தென்னை ஓலை தோரணங்கள் கட்டு ரூ.10, ஒரு வாழை இலை ரூ.6, பூசணிக்காய் ரூ.30 முதல் ரூ.50, மாவிலைக் கொத்து ரூ.10, துளசி கட்டு ரூ.10, வாழைக் கன்று ஒரு ஜோடி ரூ.30 முதல் ரூ.50, சாமந்திப் பூ, மல்லிப்பூ, கனகாம்பரம் முழம் ரூ.20, கதம்பம் முழம் ரூ.30, ஒரு படி பொரி ரூ.10, உடைத்த கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பொரி ஆகியவை கொண்ட தொகுப்பு ரூ.25, நாட்டு சர்க்கரை கிலோ ரூ.120-க்கு விற்கப்படுகின்றன.

மேலும், ஆப்பிள் கிலோ ரூ.140, சாத்துக்குடி ரூ.100, ஒரு சீப்பு வாழைப்பழம் ரூ.60, ஒரு தார் வாழைப்பழம் ரூ.350 முதல் ரூ.500, 20 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.350, ஒரு கரும்பு ரூ.40 என விற்பனை செய்யப்படுகின்றன.

பூஜை பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் குறைந்த விலையில் கிடைப்பதால் இந்த சிறப்பு சந்தைக்கு நல்ல வரவேற்பு உள் ளது. இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் பல்வேறு தொழில் நிறுவனங்களில் நேற்றே ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

இதனால் பெரும்புதூர், இருங் காட்டுக்கோட்டை, செங்கல்பட்டு, மாதவரம், கொடுங்கையூர், தண்டையார்பேட்டை, மணலி உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளில் இயங்கும் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், பூஜைப் பொருட்களை நேற்று அதிக அளவில் வாங்கிச் சென்றனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகளும், பொதுமக்களும், சிறப்பு சந்தையில் குவிந்தனர்.

தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம் பேடு பேருந்து நிலையத்தில் ஆயிரக் கணக்கில் குவிந்த பயணிகள், அவர்களுக்கான சிறப்பு பேருந்து கள் இயக்கம், பூஜை பொருட்களை வாங்க வியாபாரிகளும், பொது மக்களும் குவிந்ததால் கோயம்பேடு பகுதியில் நேற்று கடும் போக்கு வரத்து நெரிசல் நிலவியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in