Published : 06 Oct 2019 08:15 AM
Last Updated : 06 Oct 2019 08:15 AM

வீடுகள் உள்ளிட்ட தாழ்வழுத்த பிரிவில் மின் இணைப்பு பல்வகை கட்டணம் ரூ.1,600-ல் இருந்து 6,400 ஆக உயர்வு: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

வீடுகள் உள்ளிட்ட தாழ்வழுத்த பிரிவில், ஒருமுனை மின் இணைப்பு வழங்குவதற்கான பல்வகைக் கட்டணத்தை ரூ.1,600-ல் இருந்து ரூ.6,400 ஆக உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும், விவசாயிகளுக்கான மின் இணைப்புக் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

தமிழ்நாடு மின்வாரியம் தற் போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதை சமா ளிக்க மின்கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் முடிவு செய்தது. இது தொடர்பாக, மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மின்கட்டணத்தை உயர்த்துவதற்கு பதிலாக, மின் இணைப்புக் கட்டணம், மீட்டர் காப் பீடு, பதிவுக் கட்டணம் உள்ளிட்ட மின் இணைப்புக்கான பல்வகைக் கட்டணங்களை உயர்த்த தீர்மானிக்கப் பட்டது.

இதன்படி, வீடுகள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், தொழிற்சாலை களுக்கு தற்போது புதிய மின் இணைப்பு வழங்க பல்வேறு கட் டணங்களை மின்வாரியம் வசூலித்து வருகிறது. அதன்படி, மின் இணைப்புக் கட்டணம், மீட்டர் வைப்புத் தொகை, வளர்ச்சிக் கட்டணம், பதிவுக் கட்டணம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

இக்கட்டணம் ஒருமுறை மட் டுமே நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப் படுகிறது. மின்கட்டணம், மின் இணைப்புக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தும் அதிகாரம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் திடம் உள்ளது.

அதன்படி, மின் இணைப்புக் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கக் கோரி, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின்வாரியம் மனு அளித்தது.

இந்த மனு மீது, ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மாதம் 25-ம் தேதி சென்னை தி.நகரில் பொது மக்களிடம் கருத்துகேட்புக் கூட் டத்தை நடத்தியது. இதில் பங்கேற் றவர்கள் மின் இணைப்புக் கட்ட ணத்தை உயர்த்த, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மின்வாரியம் மின் இணைப்புக் கட்டணத்தை 300 முதல் 400 சதவீதம் வரை உயர்த்த தீர்மானித்துள்ளது. அதற்கு பதிலாக, 25 சதவீதம் வரை உயர்த்தலாம் என ஒருசிலரும், இந்த மின் இணைப்புக் கட்டண உயர்வை முற்றிலுமாக கைவிட வேண்டும் என ஒருசிலரும் கோரிக்கை வைத்தனர்.

உள்ளாட்சித் தேர்தல்

இதற்கிடையே, விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து, தேர்தல் முடிந்ததும் மின் இணைப்புக் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் பட்டது. அத்துடன், தற்போதைய சூழ் நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு எந்நேரத்திலும் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், புதிய மின் இணைப்புக் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள் ளது. இதன்படி, தாழ்வழுத்த பிரிவில் ஒருமுனை மின் இணைப்புக்கான பல்வகைக் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இதில், வீடுகளுக்கு ரூ.250 ஆக உள்ள மின் இணைப்புக் கட்டணம் ரூ.500 ஆகவும், மீட்டர் வைப்புத் தொகை ரூ.600 ஆகவும், ரூ.50 ஆக இருந்த பதிவுக் கட்டணம் ரூ.100 ஆகவும், ரூ.400 ஆக இருந்த வளர்ச்சிக் கட்டணம் சென்னைக்கு ரூ.5,000 ஆகவும் மற்றும் பிற பகுதிகளுக்கு ரூ.1,400 ஆகவும், வைப்புத் தொகை ரூ.200 ஆகவும் என சென்னைக்கு மொத்தமாக ரூ.6,400 ஆகவும், பிற பகுதிகளுக்கு ரூ.2,800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மும்முனை மின் இணைப்புக் கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.750 முதல் 1,000 ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

குடிசைத் தொழில்கள், விசைத் தறிக்கு ஒருமுனை மின் இணைப்புக் கட்டணம் ரூ.250-ல் இருந்து ரூ.500 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ.500-ல் இருந்து ரூ.750 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வழிபாட்டுத் தலங்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஒருமுனை மின் இணைப்புக் கட்டணம் ரூ.250-ல் இருந்து ரூ.500 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ.500-ல் இருந்து ரூ.750 முதல் ரூ. 1,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், மீட்டர் பெட்டிகளை மாற்ற ரூ.500 முதல் ரூ.2,000 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

மின் இணைப்பின் பெயர் மாற்றம் செய்ய உயரழுத்த மின் இணைப்புகளுக்கு ரூ.2,000-ல் இருந்து ரூ.3,000 ஆகவும், சோலார் மற்றும் காற்றாலை இணைப்புகளுக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து, ரூ.1.50 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மின்கட்டணத்தை காசோலை மூலம் செலுத்தும்போது, பணம் இன்றி காசோலை திரும்பி வந்தால் அதற்கு ரூ.250 அபராதக் கட்டணம் வசூலிக்கப்படும்.

எனினும், விவசாயிகளுக்கான மின் இணைப்புக் கட்டணம் உயர்த்தப் படவில்லை. இக்கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள தாக மின்சார ஒழுங்குமுறை ஆணை யம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, பேருந்துக் கட்ட ணம், பால் கட்டணம் ஆகியவை உயர்ந்துள்ள நிலையில், தற்போது இந்த மின் இணைப்புக் கட்டணமும் உயர்ந்திருப்பது பொதுமக்களை பாதிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

அதேபோல், ஏற்கெனவே ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்பட்டுள்ள குறுந் தொழில் நிறுவனங்கள் இக்கட்டண உயர்வால் மேலும் பாதிப்படையும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x