சிலைக் கடத்தல் சட்டம் கடுமையாக்கப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்

கிராம மக்களிடம் கலந்துரையாடும் அமைச்சர் பாண்டியராஜன்.
கிராம மக்களிடம் கலந்துரையாடும் அமைச்சர் பாண்டியராஜன்.
Updated on
1 min read

விழுப்புரம்

சிலைக் கடத்தல் சட்டம் கடுமைப்படுத்தப்படும் என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட வேம்பி கிராமத்தில் நேற்று (அக்.4) கிராம மக்களுடன் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்துரையாடினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள அருங்காட்சியகம் மேம்படுத்தப்படும். மேலும், விழுப்புரத்தில் ஒரு அருங்காட்சியகம் விரைவில் அமைக்கப்படும். விழுப்புரம் மாவட்டத்தில் அதிக புதையல் கிடைக்கிறது. செஞ்சிக்கோட்டையை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 36 ஆயிரம் சுவடிகள் நம்மிடம் உள்ளன. அதிக சுவடிகள், கல்வெட்டுகள் விழுப்புரம் மாவட்டத்தில் கிடைக்கிறது.

கீழடியில் தற்போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் குவிகின்றனர். அங்கு பணியாற்றுபவர்கள் 25 பேர் உள்ளனர். தற்காலிகமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. விரைவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

வெளிநாட்டில் உள்ள 50 ஆயிரம் சிலைகளில் 60 சதவீத சிலைகள் தமிழகத்திலிருந்து சென்றவை. சிலைகள் திரும்பி வருவது இந்த ஆட்சியில்தான் என்பதை இங்கு பதிவு செய்கிறேன். பாதுகாப்பு அறையில் உள்ள 200 சிலைகளை அந்தந்த கோயில்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டில் சிலைக் கடத்தல் தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தை கடுமைப்படுத்த வேண்டும் என்று சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் முயற்சி மேற்கொண்டுள்ளார்," என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in