

சென்னை
சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக பதவி வகித்த எஸ்.மணிக்குமார், கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு நேற்று பிரிவு உபச்சார விழா நடந்தது.
இவ்விழாவில் பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி மற்றும் நீதிபதிகள் ஆர்.சுப்பையா, எம்.சத்தியநாராயணன், என்.கிருபா கரன், எம்.எம்.சுந்தரேஷ் உள்ளிட்ட நீதிபதிகள் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட் டர் ஜெனரல் ஜி.ராஜகோபால், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் எஸ்.ஆர்.ராஜகோபால், எஸ்டிஎஸ்.மூர்த்தி, நர்மதா சம்பத், ஏ.குமார், அரசு ப்ளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இவ்விழாவில் நீதிபதி எஸ்.மணிக்குமார் பேசும்போது, ‘‘நான் பொறியாளராக வேண்டும் என நினைத்து அதற்கான முயற்சி களில் ஈடுபட்டேன். ஆனால் எனது தந்தையும் உச்ச நீதிமன்ற முன் னாள் நீதிபதியுமான சாமிதுரையின் விருப்பத்துக்கேற்ப வழக்கறிஞர் படிப்பை முடித்தேன். அதன்பிறகு, ஐபிஎஸ் ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில் குடிமைப் பணிகள் தேர்வுக்காக பயிற்சி மேற்கொண் டேன். ஆனால் தற்போது உங்கள் முன்பு நீதிபதியாக நிற்கிறேன். எனது அறைக்கு போலீஸ் அதிகாரிகள் வரும்போதெல்லாம் நானும் ஒருநாளாவது ஐபிஎஸ் அதிகாரி போல சீருடை அணிய வேண்டும் என ஆசைப்படுவேன். எனது பணிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.