

சென்னை
இந்திரா சிவசைலம் அறக்கட்டளை சார்பில் பிரபல கர்னாடக இசைக் கலைஞர் பந்துலா ரமாவுக்கு 'இந்திரா சிவசைலம் அறக்கொடை பதக்கம்' சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் வழங்கப் பட்டது.
மியூசிக் அகாடமி மற்றும் இந்திரா சிவசைலம் அறக்கட்டளை சார்பில் 10-ம் ஆண்டு இசைக் கச்சேரி சென்னை ராயப்பேட்டை யில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் பிரபல கர்னாடக இசைக் கலைஞர் பந்துலா ரமாவுக்கு இந்திரா சிவசைலம் அறக்கட்டளை சார்பில், அதன் நிறுவனர் மல்லிகா சீனிவாசன் 'இந்திரா சிவசைலம் அறக்கொடை பதக்கம்’ வழங்கி கவுரவித்தார். மேலும், கச்சேரியில் பங்கேற்ற வயலின் கலைஞர் ஆர்.கே.ஸ்ரீராம்குமார், மிருதங்க கலைஞர் ஜே.வைத்தியநாதன், மோர்சிங் இசைக் கலைஞர் பாக்ய லட்சுமி எம்.கிருஷ்ணா ஆகி யோருக்கு, இந்திரா சிவசைலம் அறக்கட்டளையின் 10-ம் ஆண்டு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக இந்திரா சிவசைலம் அறக்கட்டளை நிறுவனர் மல்லிகா சீனிவாசன் பேசியதாவது:
எனது அன்னை இந்திரா சிவ சைலம் கர்னாடக இசை, தென்னிந் திய கலாச்சாரம் ஆகியவற்றில் பற்றுமிக்கவராகத் திகழ்ந்தார். அவர் இசைக் கலைஞர் மட்டுமல்லாது இசை ரசிகராகவும் இருந்தார். அவர் கர்னாடக இசையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில் 'இந்திரா சிவ சைலம் அறக்கட்டளை' தொடங்கப் பட்டு கடந்த 10 ஆண்டுகளாக நவராத்திரியை முன்னிட்டு இசைக் கச்சேரி நடத்தப்பட்டு வருகிறது.
அதில். கர்னாடக இசை உல கில் சிறப்பான பங்களிப்பை வழங்குவதன் மூலம், கர்னாடக இசையை பாதுகாத்து, பரப்பும் இசைக் கலைஞர்களின் பணிகளை அங்கீகரித்து, பதக்கம் மற்றும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப் பட்டு வருகிறது.
இந்த ஆண்டு, பிரபல கர்னாடக இசைக் கலைஞர் பந்துலா ரமாவுக்கு பதக்கம் வழங்கப்பட்டுள் ளது. இவர் வளரும் கர்னாடக இசைக் கலைஞர்களுக்கு வழி காட்டியாகவும், முன்மாதிரியாக வும் திகழ்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்னாடக இசைக் கலைஞர் பந்துலா ரமா பேசும்போது, "நான் இந்த பதக்கத்தை பெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பதக் கம் பெறுவதற்கு தகுதியாக இந்த அறக்கட்டளை வைத்திருக்கும் விதிமுறைகள் எண்ணை கவர்ந்துள் ளன. ஒரு தாயின் மீது கொண்ட அன்பால் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை மூலமாக விருது பெறுவதும் எனக்கு பெருமிதத்தை அளிக்கிறது. இந்த பதக்கம், எனது இசைப் பயணத்துக்கு மேலும் உத்வேகம் அளிக்கும்" என்றார்.