திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஆண்களைவிட பெண்களே அதிகம்
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி இன்று (அக்.4) வெளியிட்டார். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி (திண்டுக்கல்), மூன்று நகராட்சிகள்(பழநி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம்), 23 பேரூராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.
திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கனர் கவிதா பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுக்கு வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலுக்கான வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலைசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வாக்காளர் பட்டியலை வெளியிட்ட திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி, "உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர்பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 878190, பெண் வாக்காளர்கள் 915593 என மொத்தம் 17,93,941 பேர் உள்ளனர். மக்கள் பார்வைக்காக மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் வாக்காளர்பட்டியல் வைக்கப்படவுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி எல்லைவிரிவாக்கம் குறித்து அரசு தான் முடிவு செய்யவேண்டும்" என்றார்.
திண்டுக்கல் மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் விபரம்:
திண்டுக்கல் மாநகராட்சி:
ஆண்கள்: 83863
பெண்கள்: 88513
மூன்றாம் பாலினத்தவர்: 28
மொத்தம்: 1,72,409
பழநி நகராட்சி:
ஆண்கள்: 28457
பெண்கள்: 30698
மூன்றாம் பாலினத்தவர்: 15
மொத்தம்: 59170
கொடைக்கானல் நகராட்சி:
ஆண்கள்: 14181
பெண்கள்: 15019
மூன்றாம் பாலினத்தவர்: 3
மொத்தம்: 29293
ஒட்டன்சத்திரம் நகராட்சி:
ஆண்கள்: 13027
பெண்கள்: 13573
மூன்றாம் பாலினத்தவர்: 3
மொத்தம்: 26603
மற்றும் 23 பேரூராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 306 கிராம ஊராட்சிகள் வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
