கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு உயர் சிகிச்சை: முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி

கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு உயர் சிகிச்சை: முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி
Updated on
1 min read

கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு உயர் சிகிச்சை அளிக்க ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மனைவி சீதாலட்சுமி. தைராய்டு நோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு கடந்த 2.3.2014 அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின் பின் விளைவுகள் காரணமாக அம்மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர், தொடர் சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பு பிரிவில் சீதாலட்சுமி சிகிச்சை பெற்று வந்தார்.

இவரது உடல்நிலையில் போதிய முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினாலும், இவரது கை, கால்கள் செயலிழந்த நிலையில் இருந்தது.

இந்நிலையில் கோமாவில் இருக்கும் தனது மனைவி சீதாலட்சுமியை கருணை கொலை செய்ய அவரது கணவர் கோரினார்.

பின்னர் முதல்வர் உத்தரவின் பேரில் மேல் சிகிச்சைக்காக சென்னை, அரசு பொது மருத்துவமனையில் 1.5.2014 அன்று தீவிர சிகிச்சைப் பிரிவில் சீதாலட்சுமி அனுமதிக்கப்பட்டு இவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சீத்தாலட்சுமியின் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in