Published : 04 Oct 2019 10:25 AM
Last Updated : 04 Oct 2019 10:25 AM

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் பேரவைத் தேர்தலுக்கு நல்லதொரு முன்னோட்டம்: பலத்தை நிரூபிக்க அரசியல் கட்சிகள் தீவிரம்

செ.ஞானபிரகாஷ் 

புதுச்சேரி

வரும் 2021ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னோட் டமாக புதுச்சேரி - காமராஜ் நகர் இடைத்தேர்தல் மாறி வருகிறது. தங்கள் பலத்தை நிரூபிக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

புதுச்சேரியில் கடந்த 2016ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வென்று, ஆட்சியமைத்தது. தொடர்ந்து வந்த மக்களவைத் தேர்தலிலும், நெல்லித்தோப்பு, தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட் சியே வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

தற்போது மூன்றரை ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இச்சூழலில் காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தல் வருகிறது.

தீவிரம் காட்டும் ரங்கசாமி

நெல்லித் தோப்பு, தட்டாஞ்சா வடி இடைத்தேர்தல்கள் மற்றும் மக்களவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட்டு தோற் றது. இடையில் கூட்டணி சேர்ந்தும் வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. எதிர்க்கட்சியாக தனது பணியை என்.ஆர்.காங்கிரஸ் சரியாக செய்ய வில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இச்சூழலில் 2021 சட்டப்பேர வைத் தேர்தலுக்கு முன்னோட்டாக காமராஜ் நகர் இடைத்தேர்தல் வந்துள்ளது.

தற்போது காமராஜ் நகரில் எதிர்க்கட்சியில் யார் போட்டியிடு வது என்பது தொடங்கி, எக்கட்சி போட்டியிடுகிறது என்பது வரை குழப்பம் நிலவியது. இறுதியில் என்.ஆர்.காங்கிரஸ் களம் இறங்கியது. வேட்பாளர் புவனேஸ்வரன் என் பதைக் கூட, கட்சித் தலைவர் ரங்க சாமி அறிவிக்காமல் அதிமுக தரப் பில் அறிவித்த விநோதமும் நடந் தது.

முதலில் வேட்பாளராக அறியப் பட்ட இக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நேரு கட்சியின் தற் போதையை நிலை, ரங்கசாமியின் செயல்பாட்டை விமர்சித்து விலகி யிருக்கிறார்.

இந்த சலசலப்புக்கு மத்தியில் இந்த இடைத்தேர்தல் என்.ஆர்.காங்கிரஸூக்கு மிக முக்கியமானது. இதனால் ரங்கசாமி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க முடிவு செய்துள்ளார். கூட்டணிக் கட்சிகளு டன் இணைந்து பணியாற்றவும் திட்டமிட்டுள்ளார்.

செல்வாக்கை நிரூபிக்கும்

முயற்சியில் கண்ணன்

முன்னாள் அமைச்சர் கண்ணனும் தனது செல்வாக்கை நிரூபிக்கும் முயற்சியில் இறங் கியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக இருந்த அவர், தற்போது தனது செல்வாக்கை உயர்த்த, 'மக்கள் முன்னேற்ற காங்கிரஸ்' என்ற பெயரில் மீண்டும் புதுக் கட்சியைத் தொடங் கியிருக்கிறார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்த லுக்கு முன்னோட்டமாக இத்தேர் தலில் தனது வேட்பாளர் வெற்றி செல்வனை களம் இறக்கியுள்ளார். ''இதர வேட்பாளர்கள் கோடீஸ் வரர்களை களம் இறக்கினாலும் நாங்கள் சாதாரண மின்தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்தோரை களம் இறக்குகிறோம்'' என்கிறார்.

தக்க வைக்கும்

முனைப்பில் காங்கிரஸ்

கடந்த 2011ல் தொகுதி மறுசீரமைப்பில் உருவானதில் இருந்து தற்போது வரை காமராஜ் நகர் தொகுதியை காங்கிரஸ் தக்க வைத்துள்ளது. தனக்கு நெல்லித் தோப்பு தொகுதியை விட்டு தந்ததற்காக, பலத்த போட்டிக்கு இடையே முதல்வர் நாராயணசாமி காமராஜ் நகரை கட்சி மேலிடத்தில் இருந்து ஜான்குமாருக்கு பெற்று தந்துள்ளார். இத்தொகுதியில் வெல்ல கூட்டணிக் கட்சி அலுவல கங்களுக்கு சென்று முதல்வர் ஆதரவு கோரியுள்ளார்.

ஆளுநர் கிரண்பேடி மீது புகார்களை தெரிவித்து காங்கிரஸ் கடந்த மக்களவைத் தேர்தலிலும், இடைத்தேர்தல்களிலும் வென்றுள் ளது. அதே பாணியை இம்முறையும் தொடர அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

காத்திருக்கும் சவால்கள்

குப்பைவரி தொடங்கி ஏராள மான வரி உயர்வுகள்; ரேஷனில் தொடர்ந்து இலவச அரிசி விநி யோகம் இல்லாதது; அரிசி போடாத மாதங்களில் பயனாளிகள் வங்கி கணக்கில் சரியாக பணம் செலுத் தாதது உள்ளிட்ட பிரச்சினைகளை இந்த இடைத் தேர்தலில் எதிர்க் கட்சிகள் எழுப்பும்.

கண்ணன் தரப்போ ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தரப்பில் உள்ள குறைகளை பட்டியலிட்டு பிரச்சினைகளை எழுப்பும் இதனால இந்த இடைத் தேர்தல் மும்முனை போட்டியாகியுள்ளது.

இதன் வெற்றி - தோல்வி ஒன்றரையாண்டுகளுக்கு பின் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு நிச்சயம் முன்னோட்டமாக அமை யும்.ஏராளமான வரி உயர்வுகள்; ரேஷனில் இலவச அரிசி விநியோகம் இல்லாதது; அரிசி போடாத மாதங்களில் பயனாளிகள் வங்கி கணக்கில் சரியாக பணம் செலுத்தாதது உள்ளிட்ட பிரச்சினைகளை இந்த இடைத் தேர்தலில் எதிர்க் கட்சிகள் எழுப்பும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x